மேலும் அறிய

Kamalhassan: இந்தி பட இயக்குநர்... பிற நடிகர்களுக்கு பாடகர்... கமல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

பிறந்தநாளை முன்னிட்டு கமலுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம். 

1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி துணை டான்ஸ் மாஸ்டர், ஹீரோ, இயக்குநர், பாடலாசியர், டான்ஸ் மாஸ்டர்,  பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் வரும் இன்று 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள கமல் உலகநாயகன் என்று  திரையுலகிலும், ஆண்டவர் என்று ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படுகிறார். 

பிறந்தநாளை முன்னிட்டு கமலுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கமல்  பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை காணலாம். 

  • கமல் ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களை தமிழில் இயக்கியிருந்தாலும் முதல் முதலாக அவர்சாச்சி 420 என்ற இந்தி படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் 1997 ஆம் ஆண்டு தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல், மீனா, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்த அவ்வை சண்முகி படத்தின் ரீமேக் ஆகும். இந்திக்காக சில மாற்றங்களை கதையில் கமல் செய்திருப்பார். 
  • பொதுவாக பிற மொழிகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை தமிழுக்கு கொண்டு வர வேண்டும் என மெனக்கெடுபவர்களில் கமல்ஹாசன் மிக முக்கியமானவர். குறிப்பாக மலையாளத்தில் புகழ் பெற்ற இயக்குநர்களின் கைவண்ணத்தில் தான் நடிக்க வேண்டும் என்பது கமலின் விருப்பமாக இருந்தது. 
  • கமலின் கதை களத்தை பொறுத்தே அவரது படங்களில் கதாபாத்திர தேர்வும் இருக்கும். அதேபோல் தனது படங்களில் இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், மேக்கப் ஆர்டிஸ்ட், நடன இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பல வேலைகளை கையாள்வார். அதேபோல் தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் சத்யராஜ், மாதவன், விக்ரம், தற்போது உதயநிதி  படங்களையும் அவர் தயாரித்துள்ளார். 
  • தனது படங்களை தவிர்த்து தனுஷ் நடித்த புதுப்பேட்டை, கௌதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் ஆகிய படங்களிலும் கமல் பாடியுள்ளார். 
  • எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா ஆகியோருக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இதில் சிவாஜிக்கான நடன அசைவுகளை எம்ஜிஆருக்கு வைத்து அவரிடம் குறும்புக்காரர் என செல்லமாக திட்டு வாங்கியவர்.  
  • சினிமா தவிர்த்து சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் ஜெயா டிவியில் சினிமா தொடர்பான பட்டிமன்றமும் நடத்தியுள்ளார். 
  • தனது படங்களை இயக்கிய சில இயக்குநர்களை நடிகராகவும் நடிக்க வைத்து அவர்களின் திறமையை வெளிப்படுத்துவார். ஒரு படத்தில் வில்லனாக நடிப்பவர்களை கமலே அடுத்த படத்தில் காமெடி நடிகராகவும் பயன்படுத்துவார்.ட்
  • களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக  முதலில் நடிக்கவிருந்தவர் நடிகை டெய்ஸி இரானி. அவர் பிற்காலத்தில் நடிப்புக்காக ஒரு பயிற்சி பள்ளியை நடத்தி வந்தார். அந்த பள்ளியில் இருந்து குணா நாயகியை கண்டுபிடித்தார், 
  • இயக்குநராக வேண்டும் என சினிமாவுக்குள் வந்தவர் நடிகரானது இன்றைக்கும் காமெடி சம்பவம் என கமல் தெரிவிப்பார். 

 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget