மேலும் அறிய

Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!

ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனை உலகமெங்கிலும் நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கடந்த 1996 ஆம் ஆண்டு கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியான “இந்தியன்” படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் இந்தியன் தாத்தா என்ற கேரக்டரில் அப்பா கமல் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சமூகத்தில் நிலவும் லஞ்சம் தொடர்பான அவல நிலைகளை இப்படம் எடுத்துரைத்தது. 

இதனிடையே நீண்ட ஆண்டுகளாக ரசிகர்கள் இப்படத்தின் 2 ஆம் பாகம் கேட்டு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 22 ஆண்டுகள் கழித்து 2018 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் அறிவித்தனர். லைகா நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமான செலவில் தயாரிப்பதாக அறிவித்தது. இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், நெடுமுடி வேணு, மனோபாலா, விவேக், மாரிமுத்து என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனை உலகமெங்கிலும் நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை 7 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை சென்னையில் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் இந்த நிகழ்ச்சி மும்பையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
22 வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன்.. ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய தகவல்!
22 வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன்.. ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய தகவல்!
'மொத்த வித்தையும் இறக்கிருக்கேன்'...பழைய வீடியோவில் பேசியதை வைத்து சூழ்ச்சி! அஞ்சான் படம் குறித்து லிங்குசாமி புதுதகவல்
'மொத்த வித்தையும் இறக்கிருக்கேன்'...பழைய வீடியோவில் பேசியதை வைத்து சூழ்ச்சி! அஞ்சான் படம் குறித்து லிங்குசாமி புதுதகவல்
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Embed widget