மேலும் அறிய

கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்

Kriti Sanon : தனது கருமுட்டையை உறையவைத்தது குறித்து பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் யூடியுப் சேனல் ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகை க்ரித்த் சனோன் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் க்ரித்தி சனோன் தனது கருமுட்டையை உறையவைத்தது குறித்து பேசியுள்ளார். கட்டாயத்தின் பேரால் பெண்கள் திருமணம் செய்துகொள்வதை விட அறிவியலின் உதவியுடன் விரும்பும்போது குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர் இந்த பேட்டியில் கூறியுள்ளார்

கருமுட்டை உறையவைத்தது குறித்து க்ரித்தி சனோன் 

அந்த பேட்டியில் பேசிய க்ரித்தி சனோன், "நான் குழந்தைகளை விரும்புகிறேன். ஆனால், அதற்காக அவசரப்பட விரும்பவில்லை. நான் உண்மையாகத் தயாராக இருக்கும் நேரத்தில் திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதுவரை எனக்கு தேவையில்லாத அழுத்தம் இருக்கக் கூடாது என்பதற்காகவே கருமுட்டையை உறையவைத்தேன்," என்று கூறினார்.

மேலும், அந்த முடிவை எடுத்த பிறகு தனக்கு மிகப்பெரிய மனநிம்மதி கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். "அந்த முடிவை எடுத்தவுடன் ஒரு சுமை இறங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது வயது பற்றிய கவலை இல்லாமல் என் வாழ்க்கையையும், வேலையையும் கவனிக்க முடிகிறது," என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த முடிவை யாரும் பயத்தினாலோ அல்லது கட்டாயத்தினாலோ எடுக்கக் கூடாது என்றும், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொருத்தமான நேரத்தில் எடுக்க வேண்டிய தனிப்பட்ட முடிவு இது என்றும் தெரிவித்தார்.

"இது எல்லோருக்கும் பொருந்தும் முடிவு என்று நான் சொல்லவில்லை. ஆனால், எனக்கு அது சரியானதாகத் தோன்றியது. எதிர்காலத்தில் நான் தயாராக இருக்கும் நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பாதுகாத்து வைத்திருக்க விரும்பினேன்," என்று க்ரித்தி சனோன் கூறினார்.

திருமணம் மற்றும் குழந்தைப்பேறு குறித்து சமூகத்தில் நிலவும் எதிர்பார்ப்புகளை விட, ஒருவர் தனது வாழ்க்கைக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்வதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது தனது கவனம் முழுவதும் வாழ்க்கையையும், சினிமா பயணத்தையும் ரசிப்பதில்தான் இருப்பதாகவும், சரியான நேரம் வரும்போது குடும்ப வாழ்க்கை குறித்து முடிவு எடுப்பேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பரம சுந்தரி பாடலின் வழியாக பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார் க்ரித்தி சனோன்.தமிழிலும் இவருகு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தனுஷுடன் தேரே இஷ்க் மே படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷை விட இவரது நடிப்பு பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Embed widget