மேலும் அறிய

கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் ஆற்காடு அதிமுக எம்எல்ஏ பங்கேற்காமல் புறக்கணித்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சவால்களையும், நெருக்கடிகளையும் சமாளித்து வரும் அதிமுக-வை மீட்டெடுக்க எடப்பாடி பழனிசாமி தகக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

இபிஎஸ் ஆலோசனை:

இதையடுத்து, மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்ட நி்ர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வரும் சூழலில், இன்று ஆற்காடு பகுதி அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரான அதிமுக எம்எல்ஏ சுகுமார் பங்கேற்கவில்லை. இது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் போக்கில் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணி உருவானது. பின்னர், தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில் சிவி சண்முகம் தவிர பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பினர். ஆனாலும், அவர்களது கட்சிப் பதவியைப் பறித்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அந்த பதவியை மீண்டும் வழங்காமல் சில நாட்களுக்கு முன்பு பெயரளவிற்கு சில பொறுப்புகளை வழங்கினார். இது அவர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

புறக்கணித்த எம்எல்ஏ:

தற்போதுள்ள அதிமுக எம்எல்ஏ-க்கள் 42 பேரில் பலரும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தரப்பில் இருந்து 7 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக பக்கம் தாவ இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக நடத்தும் ஆலோசனை கூட்டத்தையும் எம்எல்ஏ ஒருவர் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது எடப்பாடி பழனிசாமி மீது தலைமையில் எம்எல்ஏ-க்கள் ஒன்றிணைந்து செயல்பட மறுப்பதையே வெளிக்காட்டுகிறது.

என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்?

எம்எல்ஏ-க்கள் சிலரது செயல்பாடுகளாலும், நிர்வாகிகள் பலரது ஒத்துழைப்பு இன்மையாலும் எடப்பாடி பழனிசாமி ஆதங்கத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மிக மோசமான சறுக்கலை அதிமுக தற்போது சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமே இதற்கு காரணம் என்று பலரும் வாதங்களை முன்வைத்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏ-க்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதையும், கட்சியை வலுப்படுத்தவும் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது.

இனி வரும் நாட்களில் அதிமுக-வில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான சூழலே அரங்கேறும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Embed widget