மேலும் அறிய

Kamalhaasan: மாஸ்டருக்கு சல்யூட்.. கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு கமல்ஹாசன் எழுதிய உருக்கமான இரங்கல் கடிதம்

இயக்குனர் கே. விஸ்வநாத்தின் மறைவிற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் இரங்கல்:

மறைந்த மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத்தின் மறைவிற்கு, கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மாஸ்டருக்கு சல்யூட் என்ற பதிவுடன் இரங்கல் கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ”கலாதபஸ்வி கே. விஸ்வநாத் அவர்கள் வாழ்வின் திருவுருவத்தையும், கலையின் அழியாத தன்மையையும் முழுமையாகப் புரிந்துகொண்டவர். அதனால் அவருடைய கலை அவரது வாழ்க்கை மற்றும் கோலோச்சிய காலங்களுக்கு பின்னரும் கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை” என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

 

இயக்குனர் கே. விஸ்வநாத் காலமானார்

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கே.விஸ்வநாத், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  92 வயதான அவர் வயது மூப்பு காரணமாக கடந்த சில காலங்களாகவே, சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவ்வப்போது பல்வேறு கலைஞர்களைத் தன் வீட்டில் சந்தித்து அவர்களுடன் உரையாடி வந்தார். கடந்த நவம்பர் மாதம், நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்றிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று நள்ளிரவு அவர் வீட்டிலேயே காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரையுலக பயணம்:

1965-ம் ஆண்டில் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கிய கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ஆத்ம கவுரவம் படத்திற்காக சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதை வென்றார். இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என 50-க்கும் ம்மேற்பட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். தனது படங்கள் மூலம், பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, நிகழ்த்துக் கலைகள் சம்பந்தப்பட்ட படைப்புகள் எனப் பல சமுக விஷயங்களை பேசி இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.  தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை  கமலை வைத்து இயக்கியுள்ளார். இயக்குனர் என்பதை தாண்டி குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா மற்றும் உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

விருதுகள்

 கடந்த 2017ம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதோடு,  பத்ம ஸ்ரீ'விருதையும் வழங்கி இந்திய அரசு அவரை  கவுரவித்துள்ளது. இயக்குனர் கே. விஸ்வநாத் 7 முறை நந்தி விருது, 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி:

ஐதராபத்தில் வைக்கப்பட்டுள்ள கே. விஸ்வநாத்தின் உடலுக்கு தெலுகு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். இதேபோன்று, இந்தி உள்ளிட்ட பல்வேறு திரையுலகை சேர்ந்தவர்களு, சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஸ்வநாத்தை தனது மாஸ்டர் என குறிப்பிடும் கமல்ஹாசன், நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget