Kamal Haasan Salary: விக்ரமின் எகிடுதகிடு சக்ஸஸ்.. ராக்கெட் வேகத்தில் சம்பளம்.. ரஜினியை முந்திய கமல்..?
விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘விக்ரம்’. விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படம் கடந்த 8 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது. கிட்டத்தட்ட 4 வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த கமல்ஹாசனுக்கு ஒரு கம் பேக் படமாக ‘விக்ரம்’ அமைந்தது.
View this post on Instagram
இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, கமல்ஹாசன் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட் வட்டாரத்தில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் அடுத்தடுத்த படங்களின் வெற்றியால், 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இருக்கின்றனர். ஆனால் கமல்ஹாசன் படம் ஒன்றிற்கு 35 கோடி சம்பளமே பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
View this post on Instagram
இந்த நிலையில் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட ஹிட், அவரை 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இணைத்து இருக்கிறது. ஆம் விக்ரம் படத்தின் ஷேர் தொகையை கணக்கிடும் போது, விக்ரம் படத்திற்கு கமலுக்கு 130 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது. இதன் மூலம் அடுத்தப்படங்களில் கமலுக்கு 130 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்தியன் 2 படத்திலே நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.