Kalki 2898 AD Box Office: 9 நாள்களில் 800 கோடிகளைக் கடந்த வசூல்.. கல்கி 2898 AD படம் அடுத்தடுத்து வசூல் சாதனை!
Kalki 2898 AD Box Office: முன்னதாக பிரபாஸின் பாகுபலி 2 திரைப்படம் 7 நாள்களில் இந்த சாதனையைப் படைத்த நிலையில், தற்போது கல்கி 2898 AD படம் 9 நாள்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளது.
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்க, நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியான கல்கி 2898 AD திரைப்படம் வசூலில் இமாலய சாதனை படைத்து வருகிறது.
800 கோடிகளைக் கடந்த வசூல்
அந்த வகையில் கல்கி படம் முதல் வாரத்தில் மட்டும் இந்தியா முழுவதும் பான் இந்திய படமாக வெளியாகி பல்வேறு மொழிகளில் சேர்த்து மொத்தம் ரூ.515 கோடிகளை வசூலித்தது.
தற்போது படம் வெளியாகி 9 நாள்களைக் கடந்துள்ள நிலையில், 9 நாள்களில் மொத்தம் ரூ.800 கோடிகளைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 11 நாள்களில் 800 கோடிகள் வசூல் எனும் சாதனையை எட்டியது.
ஷாருக்கான் சாதனையை முறியடித்த பிரபாஸ்
மற்றொருபுறம் பிரபாஸின் பாகுபலி 2 7 நாள்களிலும், ஆர்.ஆர்.ஆர் படம் 9 நாள்களிலும் இந்த சாதனையைப் படைத்தன. இந்நிலையில், கல்கி திரைப்படம் தற்போது 9 நாள்களிலேயே இந்த சாதனையைப் படைத்துள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
𝐓𝐇𝐄 𝐁𝐎𝐗 𝐎𝐅𝐅𝐈𝐂𝐄 𝐎𝐍 𝐅𝐈𝐑𝐄 🔥#EpicBlockbusterKalki in cinemas - https://t.co/xbbZpkX7g0#Kalki2898AD @SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth pic.twitter.com/rjQCsXKNsq
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 6, 2024
முதல் நாளில் மட்டும் உலக அளவில் 191.5 கோடிகளை வசூலித்த கல்கி, 9ஆம் நாளில் ரூ.30 கோடிகளை வசூலித்துள்ளது. இந்நிலையில், இன்றும், நாளையும் வார விடுமுறையைக் கருதி மீண்டும் வசூல் அதிகரிக்கும் என்றும், விரைவில் 100 கோடிகளை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.