மேலும் அறிய

Kailasa Guru Poornima : ‛அவதார் இஸ் பேக்’ குஷியில் கைலாசா... இன்று இரவு நேரில் தோன்றும் நித்தி... உடையும் 2 மாத மர்மங்கள்!

kailasa's Guru Purnima: இந்த இரண்டு மாதத்தில் தனக்கு என்ன நடந்தது? ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்பதை தனது ஆசி உரையின் நடுவே, வெளியிடவிருக்கிறார் நித்யானந்தா.

நித்யானந்தா இருக்கிறாரா? இல்லையா? என்கிற சர்ச்சை, கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி, ஜூலை துவக்கம் வரை வந்துவிட்டது. அவ்வப்போது தன் எழுத்துக்களாலும், பதிவுகளாலும் தான் இருப்பதாக கூறி வந்த நித்யானந்தா, அவ்வப்போது, சமாதியில் இருப்பதாகவும் தெரிவித்து, குழப்பி வந்தார்.

பூஜை புனஸ்காரங்களோடு இருந்த கைலாசா, நித்தியின் நித்திய பூஜைகள் இல்லாமல் வெறிச்சோடிப் போனது. அத்தனைக்கும் தனது உடல்நிலை தான் காரணம் என நித்யானந்தா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், தனக்கு எதுவுமில்லை, தன்னை நெருங்க இங்கு எதுவுமில்லை என, வழக்கமான தனது பஞ்ச் டயலாக்குகளை மட்டும் நித்யானந்தா கூறியதாக, அவரது சீடர்கள் கூறி வந்தனர். 



Kailasa Guru Poornima : ‛அவதார் இஸ் பேக்’ குஷியில் கைலாசா... இன்று இரவு நேரில் தோன்றும் நித்தி... உடையும் 2 மாத மர்மங்கள்!

உணவில்லை, உறக்கமில்லை என்று இருந்த நித்யானந்தா, புதிய உலகில் வாழ்வதாக உணர்கிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தார். இதெல்லாம் ஒருபுறமிருக்க, கைலாசா, சீடர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்ததாகவும், பல இடங்களில் நித்யானந்தா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடந்ததாகவும், இதனால் நித்யானந்தா, நிரந்தர துகில் கொண்டார் என்றும் பரவலாக பேசப்பட்டது. 

இந்நிலையில் தான், திடீரென கைலாசாவில் இருந்து ஒரு தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 13 அன்று குருபூர்ணிமா தினத்தில் சிறப்பு தரிசனம் தருகிறார் நித்யானந்தா என்பது தான், அது. கடந்த இரு மாதங்களாக தன் முகத்தை காட்டாமல், அணிகலன்கள் இல்லாமல், முடங்கிப் போயிருந்த நித்யானந்தா, இன்று இரவு இந்திய நேரப்படி, 8 மணிக்கு நேரலையில் தோன்றி, தன் பக்தர்களுக்கு ஆசி வழங்கப்போகிறார். 

இந்த இரண்டு மாதத்தில் தனக்கு என்ன நடந்தது? ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்பதை தனது ஆசி உரையின் நடுவே, வெளியிடவிருக்கிறார் நித்யானந்தா. இதுவரை இல்லாத மருத்துவ ரீதியான விளக்கங்களும், தன்னைப்பற்றிய விமர்சனங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இன்று இரவு தெளிவாக நித்யானந்தா விளக்கவிருக்கும் நிலையில், அவரது பக்தர்கள் அந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

உலகளாவிய பக்தர்களை கொண்டிருக்கும் நித்யானந்தா, தனக்கு நேர்த்தவற்றை அவரே கூறப்போவதாக கூறியிருப்பது, பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் என்றே தெரிகிறது. 

மேலும் படிக்க :

Guru Poornima 2022 : இன்று குரு பூர்ணிமா.. எதையெல்லாம் செய்து வழிபடுவது சிறப்பு?

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
Embed widget