திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
"திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் ஏதும் நடைபெறவில்லை"

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிதாக 8 நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க அனுமதியளிப்பதெனவும், சாதிவாரி எனும் சமூகநீதி கணக்கெடுப்பை மேற்கொள்ள முதற்கட்டமாக சமூகநீதி ஆணையத்தை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
"திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்"
பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நிகழ்ந்ததாக நடைபெற்றுவரும் வழக்கில் தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதாகவும், இன்னும் பல கல்வி நிறுவனங்கள் திமுகவினருக்கு பயந்து புகாரளிக்காமல் இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் சாடினார்.மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் மூடி மறைக்கவே முயன்றதாகவும், ஜெம் வீரமணி வழக்கு உட்பட அனைத்து வழக்குகளும் நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே வெளிவந்ததாகவும் அமைச்சர் விமர்சித்தார்.
"அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை இல்லை"
திமுக முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் கே.என்.நேரு ஆகியோர் மீதான நடவடிக்கைகளில் எவ்வித அரசியல் பழிவாங்கலும் இல்லையென தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமார், புகார்கள் மற்றும் உரிய ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















