முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
பாரா ஆசியப்போட்டித்தொடரில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கிய முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய், பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
முதலமைச்சர் கோப்பை போட்டித்தொடர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நடத்திவருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் அக்.15 ஆம் தேதியன்று தொடங்கி நடைபெற்ற நிலையில் கடந்த 28-ஆம் தேதி நிறைவடைந்தது.மொத்தமாக 45 வகையான போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இதற்கான நிறைவு விழா மற்றும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கான நிகழ்வு ஒன்றாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கோப்பைகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
"தலைசிறந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்"
இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கான தலை சிறந்த ஒலிம்பிக் நகரத்தை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டித்தொடருக்கு 27 லட்சம் விளையாட்டு வீரர்கள் பதிவு செய்திருந்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















