மேலும் அறிய

Sharanya Nagh : குழந்தை பருவ பாலியல் வன்முறை.. தற்கொலை முயற்சி.. ஆனால்.. காதல் ‘சரண்யா’ சொன்ன நம்பிக்கை கதை..

பக்கத்துக்கு வீட்டில் இருந்தவர்கள் கூட என்னிடம் தப்பாக நடந்து கொண்டார்கள். அதை தடுக்கும்  தைரியம் கூட அன்று என்னிடம் இல்லை. அம்மாவிடம் போய் கூட சொல்ல முடியவில்லை காரணம் அம்மாவுக்கும் இதே நிலைமைதான்...

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் - சந்தியா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'காதல்'. படத்தின் ஹீரோ ஹீரோயின் எந்த அளவுக்கு பிரபலமானார்களோ அதே அளவிற்கு சந்தியாவின் தோழியாக நடித்த சரண்யாவும் பிரபலமானார். பேராண்மை படத்தில் ஜெயம் ரவியை ஒருதலையாக காதலிக்கும் மாணவியாக நடித்தவர்தான் சரண்யா நாக். ஒரு சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்தபோதும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் சினிமாவில் இருந்து விலகினார் என பேசப்பட்டது.

சமீபத்தில் தனியார் நாளிதழின் யூட்யூப் தளத்துக்கு நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், அவர் வாழ்க்கையில் கடந்து வந்த பல கரடு முரடான பாதைகளை  பற்றியும் அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பது குறித்தும் மனம் திறந்து இருந்தார். 

Sharanya Nagh : குழந்தை பருவ பாலியல் வன்முறை.. தற்கொலை முயற்சி.. ஆனால்.. காதல் ‘சரண்யா’ சொன்ன நம்பிக்கை கதை..
 ”குழந்தை பருவத்தில் பக்கத்துக்கு வீட்டில் இருந்தவர்கள் கூட என்னிடம் தப்பாக நடந்து கொண்டார்கள். அதை தடுக்கும்  தைரியம் கூட அன்று என்னிடம் இல்லை. அம்மாவிடம் போய் கூட சொல்ல முடியவில்லை காரணம் அம்மாவுக்கும் இதே நிலைமை தான். இது போன்ற பிரச்சனைகள் எனக்கு ஒரு நாள் இரண்டு நாள் நடக்கவில்லை. ஏன் தான் பெண்ணாக பிறந்தோம் என நினைக்கும் அளவுக்கு இருந்தது. 27 வயது வரைக்கும் இது போன்ற ஆண்களை மட்டும் தான் சந்தித்தேன். சக பெண்கள் அனைவரும் என்னுடைய நிதிநிலை ஸ்டேட்டஸ் பற்றி மட்டும்தான் பார்த்தார்கள்” என்றார்.

”அம்மா சரியாக வழி நடத்தியிருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கலாம் என பலர் என்னை பற்றி நினைத்து இருக்கலாம். ஆனால் இந்த சமூகம் என்னுடைய அம்மாவை மிகவும் கடுமையாக நடத்தியது. பக்கத்துக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கு தெரியும்? அம்மா எப்படியோ அப்படி தான் பொண்ணும் என சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க. 

எப்போதுமே என வாழ்க்கையில் ஏதாவது ஒரு அதிசயம் நடக்கும் என நான் எதிர்பார்த்தேன். எந்த இடங்களில் எல்லாம் நான் சறுக்கினேனோ அந்த இடத்திலிருந்து என்னை யாராவது ஒருவர் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதில் மிகவும் நம்பிக்கையாக இருந்தேன். பலரோட வாழ்க்கை கூட தப்பு தப்பா தான் இருக்கும். அவர்கள் நினைக்கலாம் இந்த பொண்ணுக்கு நல்லவர்கள் கிடைத்தார்கள் அதனால் முன்னேறி வந்துவிட்டது என. ஆனால் அப்படி இல்லை. இந்த சமூகத்தில் எல்லா விதமான மனிதர்கள் கலந்தேதான் இருப்பார்கள். நீங்கள் தான் அதில் சரியானவர் யார்? என்பதை தேர்ந்து எடுக்க வேண்டும், அதற்கு முதலில் நீங்கள் உங்கள் பிரச்சனையில் இருந்து வெளிவர வேண்டும். எனக்கு அப்படி சில நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். 

2020 ஆண்டு வைதேகி எனும் பத்திரிகையாளர் எனக்கு போன் செய்து இருந்தார். ”கொரோனா காலகட்டத்தில் தூய்மை பணியாளர்கள் பற்றி நீ போட்டு இருக்கீயே ஏன் ஒரு ஆர்டிக்கல் எழுதக்கூடாது என்று கேட்டார். சரண்யா பொன்வண்ணனுக்கு பதிலா எனக்கு போன் பண்ணிட்டீங்க போல இருக்கு அக்கா என்றேன். இல்லை நான் உன்னைத்தான் பேட்டி எடுக்க போகிறேன்” என்றார்.

“அது தான் என் வாழ்க்கைக்கு மறுபடியும் பிள்ளையார் சுழி போட்டது. அதை பார்த்து பல யூடியூப் சேனல்களும் என்னை பேட்டி எடுத்தார்கள். அதற்கு பிறகு தான் என்னுடைய சில நல்ல நண்பர்கள் மூலம் சொந்தமாக புஷ்காரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினேன்”

Sharanya Nagh : குழந்தை பருவ பாலியல் வன்முறை.. தற்கொலை முயற்சி.. ஆனால்.. காதல் ‘சரண்யா’ சொன்ன நம்பிக்கை கதை..

ஒரு குட்டி கதை ஒன்றை சொல்கிறேன். வாழ்க்கையில் நீங்க தப்பே செய்தது இல்லையா, செய்து அதிலிருந்து மீண்டு வந்தது இல்லையா என்று கேட்டால் அனைவருமே வாழ்க்கையில் ஏதாவது ஒரு தப்பு செய்து இருப்பார்கள். வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு லவ், லஸ்ட், ரிலேஷன்ஷிப் இதை நிச்சயமாக சந்தித்து இருப்போம்.

சம்பாதிக்க ஆரம்பித்ததற்கு பிறகு ஓவர் கான்ஃபிடன்ஸ் வந்து விடும். எல்லாத்தையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வந்து விடும். ஆனால் முறையாக எதையும் செய்யாததால் தோல்வியை சந்தித்த பிறகு அடுத்தடுத்த தோல்விகளால் மனம் துவண்டு போகும். தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும். நானும் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளேன். இதை சொல்வதற்கு கொஞ்சம் அசிங்கமாகத்தான் உள்ளது. அதற்கு பிறகு என்ன நடக்கும் நான் நடிகை என்பதால் இரண்டு நாட்களுக்கு பேப்பரில் நியூஸ் வரும். அதற்கு பிறகு அது மறந்து போகும். அதற்கு பிறகு தான் நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென யோசித்தேன். தற்கொலை செய்து கொள்ள ரொம்ப தைரியம் வேண்டும். எனக்கு அந்த தைரியம் இல்லை. என்னை போல முட்டாள் மாதிரி யோசிக்காதீங்க. 

வாழ்வதற்கான தைரியம் என்னிடம் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்யலாம் என நினைத்தேன். துணிச்சலாக இருந்தால் தான் நம்முடைய வாழ்க்கையை அழகாக அமைத்துக்கொள்ள முடியும். உங்களால் மட்டும்தான் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக காப்பாற்றி கொள்ள முடியும். எத்தனை மாற்றங்கள் என் வாழ்க்கையில் நடந்த பிறகும் என்னுடைய சிரிப்பு மட்டும் மாறவே இல்லை. அதற்கு காரணம் நான் என் வாழ்க்கையை பார்த்த விதம் அழகாக இருந்தது. அதனால் உங்கள் வாழ்க்கை மாறவே மாறாது இறுக்கமாக உணர்ந்தால் அதை எல்லாம் தூக்கி எறிந்து விடுங்கள். உங்களுடைய வாழ்க்கையை என்னுடையது போல அழகாக மாறும்” என தான் கடந்து வந்த கடுமையான பாதையில் இருந்து எப்படி தன்னை மீட்டு  கொண்டு வந்து இருந்து சிங்க பெண்ணாக பல பெண்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறார் என்பது குறித்து மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசியிருந்தார் சரண்யா நாக்.  

 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget