Watch video: நீயின்றி நானுமில்லை... ஒர்க் அவுட் செய்த சமந்தா.. கண்காணித்த சாஷா..- வைரலாகும் வீடியோ !
சமந்தா மற்றும் அவரது ஃபிட்நஸ் வீடியோக்கள் இணையதளத்தின் அதுவும் இன்ஸ்டாகிராமின் சென்சேஷன்.
சமந்தா மற்றும் அவரது ஃபிட்நஸ் வீடியோக்கள் இணையதளத்தின் அதுவும் இன்ஸ்டாகிராமின் சென்சேஷன். அந்த வகையில் சமந்தா ஃபிட்னஸ் ஸ்டூடியோவில் தனது பூச் வகை செல்ல நாய்க்குட்டியுடன் இணைந்து செய்யும் ஒர்க் அவுட் வீடியோ ஒன்று தீயாகப் பரவி வருகிறது. தனது கணவருடனான பிரிவுக்குப் பின்னர் ஆன்மிகச் சுற்றுலா சென்று வந்தவர், அதன் பின்ன படங்களில் கமிட்டாகி பரபரப்பாகவும், பிட்னஸில் பிஸியாக விறுவிறுப்பாகவும் இருந்து வருகிறார்.
அதுவும் ஃபிட்நஸ்ஸில் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இது மட்டுமன்றி தனது ஸ்டோரி பக்கத்திலும் ஃபிட்னஸ் மோட்டிவேஷன் சார்ந்த தகவல்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் ஒர்க் அவுட் செய்ய அருகில் அவரது ட்ரெய்னர் ஜுனைத் ஷேக் அறிவுரைகளை வழங்க கூடவே சமந்தாவின் செல்ல நாய்க்குட்டியான சாஷாவும் இருக்கிறது.
View this post on Instagram
ஷாசாவை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு சமந்தாவுக்கு அறிவுரைகளைக் கூறுகிறார். இந்த வீடியோவை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், சாஷா பேபி.. நம்ப முடியவில்லை. 50 பவுண்ட் எடையுள்ள உன்னை அப்படியே தூக்கிக் கொண்டுள்ளாரே. ஜுனைத் ஷேக்கால் மட்டும்தான் இது முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்