மேலும் அறிய

Watch Video | பதினாறு அடி பாயும் மாஸ்டர் சூர்யா.. சண்டையிலும், நடிப்பிலும் மிளிரும் குட்டி விஜய்சேதுபதி...

வீடியோவில் சூர்யாவின் வலியில் கத்தும்போதும், அவரது முழு திறமையை காட்ட வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி எந்த உதவியும் செய்யவில்லை.

தமிழ் திரையிலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர் மற்ற கலைஞர்களில் இருந்து பெரிதும் வித்தியாசமானவர். பெரும்பாலானோருக்கு விஜய் சேதுபதியின் குடும்பத்தினரை தெரியாது. விஜய் சேதுபதியும் அவர்களை பொதுவெளியில் காட்ட விரும்பவில்லை.

ஆனால், விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடிப்பில் தந்தை போல் கெட்டிக்காரராக திகழ்ந்து வருகிறார். நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் 2015 ஆம் ஆண்டு திரையுலகில் அடியெடுத்து வைத்தார் அவர். அதன் பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் படத்தில் படம் நெடுக விஜய் சேதுபதியுடன் வரும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gokulnath (@gokulnath_off)

சிந்துபாத் படம் தோல்வி அடைந்தாலும் அதில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. விஜய் சேதுபதியும் அவரது மகன் சூர்யாவும் சிந்துபாத் படத்தில் தென்காசியை சேர்ந்த திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்கள். இதில் விஜய் சேதுபதிக்கு இணையாக அவரது மகன் சூர்யாவின் நடிப்பையும் அவரது ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர்.

வளர்ந்த பிறகு கதாநாயகனாக நடிப்பதற்கான அத்தனை தகுதிகளையும் வளர்த்து வருகிறார் சூர்யா. விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் நட்பாக பழகும் தந்தையாக இருந்து வருகிறார். அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.  சூர்யா விஜய் சேதுபதியின் கண்ணத்தை கடிக்கும் செல்பி புகைப்படம் பெரிய அளவில் வைரலானது.

சிந்துபாத் படத்தின் சண்டை காட்சிக்கான பயிற்சியில் விஜய்சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா வலியில் கத்தும்போதும், அவரது முழு திறமையை காட்டவேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி எந்த உதவியும் செய்யவில்லை. பயிற்சி முடிந்த பிறகு வலியில் தவித்த மகனுக்கு தனது டிரேட் மார்க் முத்தத்தை வழங்கினார்.

இயல்பாகவே விஜய் சேதுபதிபோல் பல பரிணாமங்களில் நடிக்கும் நடிகராக சூர்யா திகழ்வார் என்ற பேச்சு திரையுலகில் எழுத் தொடங்கி இருக்கிறது. அனுபவம் வாய்ந்த தென் இந்திய நடிகரை போல் சண்டை காட்சிகளை இயல்புடன் சூர்யா செய்வதாகவும், குத்துவது, உதைவது, தடுப்பது என அனைத்தையும் திறம்பட சூர்யா செய்வதாக அந்த வீடியோவை பார்த்தவர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

நானும் ரவுடி தான், சிந்துபாத் படங்களின் வரிசையில் விஜய் சேதுபதியும் அவரது மகன் சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து அதை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Embed widget