Johnny Depp | Pirates of the Caribbean ஜேக் ஸ்பேரோவுக்கு ஃபேனா நீங்க? அவருக்கு இதுதான் வருத்தமாம்..
இரண்டாவது மனைவியின் விவாகரத்திற்கு பின்னர், அதுவரையில் கோலோச்சி வந்த ஜானி டெப்பின் வாழ்க்கை தலைகீழானது.
உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். ஜானி டெப் என்பதை விட ‘ஜாக் ஸ்பேரோ’ என்றால்தான் பலருக்கு பரிச்சயம். இந்நிலையில் ஹாலிவுட்டில் இருந்து தான் புறக்கணிக்கப்படுவதாக ஜானி டெப் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தில் ஜாக் ஸ்பேரோவாக தத்ரூபமாக வாழ்ந்திருப்பார் ஜானி. இவரது நடிப்பை உலக ரசிகர்கள் கொண்டாடினார்கள். 90’ஸ் கிட்ஸ் மட்டுமட்டுமல்லாம் 2K கிட்ஸுக்கும் பரிச்சயம் ஆகும் அளவிற்கு ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தின் அத்தனை சீசனிலும் ஜாக் ஸ்பேரோ என்னும் கடல் கொள்ளையனாக வந்திருப்பார். ஆனால் இவரது இரண்டாவது மனைவியின் விவாகரத்திற்கு பின்னர் கோலோச்சி வந்த ஜானி டெப்பின் வாழ்க்கை தலைகீழானது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்ட் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான இரண்டே வருடங்களில் இந்த தம்பதிகள் விவாகரத்து பெற்றனர். இந்த விவாகரத்திற்கு பிறகு அம்பெர் ஹெர்ட் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனது விவாகரத்து தொடர்பாக மனம் திறந்திருந்த அம்பெர் ஹெர்ட், ஜானி டெப் தன்னை கன்னங்களில் அறைந்து, எட்டி உதைத்து அடித்து துன்புறுத்தியதாக ஓபன் ஸ்டேட்மண்ட் கொடுத்திருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையானது , பின்னர் அப்போது ஒப்பந்தமாகியிருந்த பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியனின் அடுத்த பாகத்தில் இருந்து ஜானி டெப் நீக்கப்பட்டார்.
இதற்கு அவரின் மனைவி அம்பெர் ஹெர்ட்டின் குற்ச்சாட்டுதான் காரணம் என வெளிப்படையாக தெரிந்தது. பின்னர் நீதிமன்றத்தில் தனது இரண்டாவது மனைவி மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார் ஜானி டெப் . ஆனால் ஜானி டெப் தனது மனைவியை அடித்தது உண்மைதான் என குற்றம் நிரூபிக்கபட்டது. இதனால் அப்போது அவர் கமிட்டாகியிருந்த படங்களும் கைவிடப்பட்டன.
இந்நிலையில் ஜானி டெப் தனது நடிப்பில் உருவாகியுள்ள மினமாடா (Minamata) என்ற திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து ஜானி டெப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் ஹாலிவுட்டால்’ புறக்கணிக்கப்படுவது போல் ஒரு எண்ணம் வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ஊடகத்தின் தவறான கணிப்புதான் என அவர் வருத்தம் தெரிவிக்கிறார். மேலும் கடந்த ஐந்தாண்டு காலத்தில் தான் சந்தித்த சவால்களை பகிர்ந்துகொண்ட ஜானி டெப், நான் தொடர்ந்து பயணித்துக்கொண்டு இருக்கிறேன். ஒரு நாள் உண்மை வெளிச்சத்திற்கு வரத்தான் போகிறது என தெரிவித்துள்ளார். ஜானி டெப்பை ஹாலிவுட் புறக்கணிப்பது போல உணர்ந்தாலும் அவருக்கான விருதுகளும் அங்கீகாரங்களும் அவரைத்தேடி வர தவறவில்லை. அதன் அடிப்படையில் சான் செபாஸ்டியன் மற்றும் கார்லோவி வேரி திரைப்பட விழாவில், வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை ஜானி டெப்பிற்கு வழங்கி கவுரவப்படுத்தியது. அதேபோல செக் குடியரசில் உள்ள கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழாவும் ஜானி டெப்பின் சாதனையை அங்கீகரித்தது.