Aishwarya Rajinikanth: ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்ட நகைகள்: மேலும் 43 சவரன் மீட்பு..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகளில் மேலும், 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகளில் மேலும், 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த வாரத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் “நான் தற்போது போயஸ் கார்டனில் உள்ள எனது தந்தை ரஜினிகாந்த் வீட்டில் வசித்து வருகிறேன். 2019 ஆம் ஆண்டு எனது தங்கைக்கு திருமணம் நடந்த நிலையில், அன்றைய நாளிலிருந்து எனக்கு சொந்தமான நகைகளை லாக்கரில் வைத்து தனியாக பராமரித்து வருகிறேன். கிட்டதட்ட 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளோடு பாரம்பரிய நகைகளும் அந்த லாக்கரில் இருந்தது எனவும் அது தற்போது காணவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதில் தந்து வீட்டில் வேலை பார்க்கும் ஈஸ்வரி என்பவர் மீதும் கார் ஓட்டுநர் ஈஸ்வரன் என்பவர் மீதும் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
அதன் படி விசாரணை நடத்திய காவல் துறை ஏற்கனவே 20 சவரன் நகையை மீட்டு இருந்தது. தற்போது, அதில் மேலும், 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.