ரேப் சீனுக்கு ஓகே சொன்ன விஷால்! விஜய்யிடம் ப்ராங்க்... - பங்கம் செய்த நடிகர் ஜீவா...
அப்போதான் கேட்டேன், உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஆக்டர் யாரு சார்ன்னு கேட்டேன். எனக்கு ஜீவா ரொம்ப பிடிக்கும், என் பசங்களுக்கெல்லாம் கூட அவரதான் பிடிக்கும்னு சொன்னார்.
'ஆசை ஆசையாய்' படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஜீவா. இவர் ராம், டிஷ்யும், ஈ, நண்பன், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற 83 திரைப்படத்தில் இந்திய அணியின் விளையாட்டு வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் செய்த ப்ராங்க் கால்கள் பற்றி சொல்லியிருந்தார். அதில் தளபதி விஜயையும், நடிகர் விஷாலையும் ப்ராங்க் செய்த சம்பவங்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
அது குறித்து அவர் கூறியதாவது, "இரண்டு பேரை ப்ராங்க் செஞ்சிருக்கேன், முதல்ல விஷால ஒரு எஃப்எம் ஷோல ப்ராங்க் பண்ணேன். ரொம்ப நேரம் பேசினேன், ஒரு பெரிய ப்ராஜக்ட் வந்திருக்கு, ஹாலிவுட் ப்ராஜக்ட், ஆனா நெகட்டிவ் ரோல்தான்னு சொன்னேன். அவனும் சரி சரின்னு நம்பி கேட்டுட்டு இருக்கான், உனக்கு டேவிட் ஃபிஞ்சர் தெரியுமான்னு கேட்டேன், இல்ல தெரியாதுன்னு சொன்னான். நல்ல படம்லாம் பண்ணிருக்காருடா, செவன், ஃபைட் கிளப் மாதிரியான படமெல்லாம் பண்ணவரு, இப்போ இந்த படத்துல கேக்குறாருன்னு சொல்றேன். நம்பிக்கிட்டே கேக்குறான். நெகட்டிவ் கேரக்டர்தான். அவரு சீன்ஸ் எல்லாம் கொஞ்சம் கொடூரமாதான் எடுப்பாரு தெரியும்ல. ஒரு ரேப் ஸீன் வேற இருக்குன்னு சொல்லிகிட்டே போறேன். அவனும் சரி மச்சான் பண்ணலாம்ன்னு சொல்றான். ஒரு கட்டத்துல ரொம்ப சாரி மச்சான், இங்க ஒரு ஷோவுக்கு வந்துருந்தேன், ப்ராங்க் பண்ண சொன்னாங்க ன்னு சொல்லிட்டேன். அது ஒரு நல்ல அனுபவம். அப்புறம் விஜய் சார ப்ராங்க் பண்ணேன். அவருக்கு என்ன ரொம்ப பிடிக்கும், ஒரு நாள் கால் பண்ணி, சார் நான் உங்க பெரிய ஃபேன் சார்னு பேசினேன். அவரும் அப்படியப்பா சரிப்பா சரிப்பான்னு சொல்லி கேட்டுட்டே இருந்தார். அப்போதான் கேட்டேன், உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஆக்டர் யாரு சார்ன்னு கேட்டேன். எனக்கு ஜீவா ரொம்ப பிடிக்கும், என் பசங்களுக்கெல்லாம் கூட அவரதான் பிடிக்கும்ன்னு சொன்னார். ஆனா அவர் கண்டுபிடிக்கல, யதார்த்தமா சொன்னாரு, நான் உடனே நான் ஜீவாதான் சார் பேசுறேன்னு சொன்னேன், அந்த விடியோ கூட யூட்யூப்ல இருக்கு இப்போவும்.
நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் ‘83’ படம் வெளியானது. இப்படத்தில், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தாக உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார் ஜீவா. தற்போது ஜீவா அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கும் இப்படத்திற்கு ‘வரலாறு முக்கியம்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். நாயகிகளாக காஷ்மீரா பர்தேஷி, ப்ரக்யா நாகரா நடிக்க சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே, தனது அப்பா தயாரிப்பில் ‘ஆசை ஆசையாய்’, ’தித்திக்குதே’, ‘கச்சேரி ஆரம்பம்’ உள்ளிட்டப் படங்களில் ஜீவா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீவாவுடன் விடிவி கணேஷ், கே.எஸ் ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.