மேலும் அறிய

ஜெயராம் விஜய் சேதுபதி நடித்துள்ள 'காதல் கதை சொல்லவா' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி , ஜெயராம் , நகுல் ஆகியோர் இணைந்து நடித்துள்ள காதல் கதை சொல்லவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின்  மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் " காதல் கதை சொல்லவா" இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நகுல் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.ஆத்மிகா, ரித்திக்கா சென் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் திலக் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்திருந்தார். இது தவிர்த்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படங்கள் தவிர்த்து வித்தியாசமான முயற்சியில் மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ் படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி , அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் ஜனவரி 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் புரி ஜகன்நாத் இயக்கத்தில் ஸ்லம்டாக் , மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் ஆகிய படங்களும் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதி . ஜெயராம் மற்றும் நகுல் இணைந்து நடித்துள்ள காதல் கதை சொல்லவா கவனிக்கதக்க படங்களில் ஒன்று. 

படக்குழு 

வசனம் - கண்மணி ராஜா
ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
M. ஜெயச்சந்திரன் மற்றும் சரத் இருவரும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். 
கண்மணி ராஜா, முத்தமிழ், கவிதாரவி, K. பார்த்திபன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
C. பிரசன்னா, சுஜித், பிரவின்.G மூவரும் நடனம் அமைத்துள்ளனர்.
எடிட்டிங் - ஜீவன்
கலை இயக்கம் - சிவா யாதவ்
ஸ்டண்ட் - T. ரமேஷ்
தயாரிப்பு நிறுவனம்- பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர் - ஆகாஷ் அமையா  ஜெயின்.

கதை எழுதி திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் - சனில் 

படம் பற்றி இயக்குனர் பகிர்கையில் மூன்று கோணங்களில் நடக்கும் வித்தியாசமான காதல் கதை இது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத புதிய பரிணாமத்தில் இந்த படத்தில் வருகிறார். “காதல் கதை சொல்ல வா” – மனித உணர்வுகள், நம்பிக்கை, காதல், தியாகம், மற்றும் மனிதநேயத்தின் வலிமையை சொல்கின்ற  மனதை நெகிழ வைக்கும் படமாக இருக்கும். படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாககிறது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget