மேலும் அறிய

அருண் விஜய் ஓவர்... அடுத்த லிஸ்ட்டில் ஜெயம் ரவி... தொடரும் ஹரியின் வெறியாட்டம்!

இயக்குநர் ஹரி படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

இயக்குநர் ஹரி படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

கடைசியாக ஹரி இயக்கத்தில் திரைக்கு வந்த படம் சாமி 2. அதன் பின்னர் அருண் விஜய் நடிப்பில் யானை வெளியாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த டிசம்பரில் யானை திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த திரைப்படம் ரிலீசுக்கு நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு, பலமுறை தள்ளிப்போனது. இறுதியாக யானை திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், அடுத்தபடியாக ஹரி நடிகர் ஜெயம் ரவியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இருவரும் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்து ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அது செப்டம்பரில் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து அகிலன் படமும் அவர் நடிப்பில் முடிந்தாகிவிட்டது. தற்போது ஜன கன மன, ஜெயம் ரவி 28 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் ஜெயம் ரவி அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது நேற்று...
ஹரி இயக்கத்தில் வெளிவரவுள்ள யானை படத்தின் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், பேசிய இயக்குநர் ஹரி, யானை படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை இமோஷனலாக விவரித்து வந்தார். அப்போது திடீரென அவரை அறியாமல் ஒரு கெட்ட வார்த்தையை பேசிவிட்டார். அழுத்தம் திருத்தமாக சொல்லவில்லை. அவர் சொன்ன வேகமும் அது ஒரு ஃப்ளோவில் வந்ததுபோல் தான் இருந்தது என சிலர் கருத்து கூறுகின்றனர்.

ஆனால், தான் பேசியது கெட்டு வார்த்தை. அப்படி பேசியிருக்கக் கூடாது என்பதை கன நேரத்தில் புரிந்து கொண்ட ஹரி உடனே மைக்கிலேயே "நான் இப்போ என்ன பேசினேன்... ஏதாவது வார்த்தையை விட்டுவிட்டேனா?" என்று கேட்டு சமாளித்தார். ஆனாலும் நெட்டிசன்கள் அவரை விட்டபாடில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தனது ட்விட்டரில் இயக்குநர் ஹரியை திட்டியுள்ளார். படம் என்ன பாடு படுமோ என்று அதற்கு நெட்டிசன்கள் பின்னூட்டம் பதிவிட்டுள்ளன.

இது இன்று..
நேற்றைய விழா இவ்வாறாக சர்ச்சையான நிலையில், இன்று ஜெயம் ரவியை வைத்து இயக்குநர் ஹரி படம் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது டேக் டைவர்ஷன் பாணியா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Embed widget