மேலும் அறிய

ஜெயம் ரவியின் ”பிரதர்” வீடியோ வெளியீடு..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜெயம் ரவியின் வெற்றி படங்களின் வரிசையில் ”பிரதர்” படமும் அமையும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

கோடியில் வசூலை அள்ளிய படங்கள்:

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.  இவர் நடித்த முதல்  படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்ததோடு கோடிகளில் வசூலை அள்ளி தந்தது ஜெயம் படம். இதன் மூலம் ஜெயம் ரவி என்று அறியப்பட்ட இவர் நடித்த தனிஒருவன், எம்.குமரன் S/O மகாலெட்சுமி, அடங்க மறு, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, கோமாளி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களும் கோடிகளில் வசூலை தந்தது.  தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் ஜெயம் ரவிக்கு கடந்த சில காலங்களாக படங்கள் பெரியதளவில் வெற்றியை தேடி தரவில்லை. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் வெளிவந்த இறைவன், சைரன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

ஜெயம் ரவியின் லைன் அப் படங்கள்:

இதற்கிடையில் தற்போது ஜெயம் ரவி சுவாரசியமான பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். குறிப்பாக ”வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்” நிறுவனம் மூலம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் அர்ஜுனன் இயக்கத்தில் வெளியாக உள்ள  ’ஜீனி’ படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.  100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு பின் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பில் அனைத்து ரசிகர்களும் கண்டு மகிழும் வகையில் கலகலப்பான குடும்ப படமாக  ராஜேஷ் இயக்கத்தில் ’பிரதர்’ படம் உருவாகி வருகிறது. அதேபோல கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை, மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 ஆகிய படங்களும் வரிசையில் உள்ளது. 


ஜெயம் ரவியின் ”பிரதர்” வீடியோ வெளியீடு..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பிரதர் அனவுன்ஸ்மண்ட் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:

பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதன் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது. ஸ்கிரீன் செவன் தயாரிப்பில் பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் திரைக்கு வரவுள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு இயக்குநர் ராஜேஷ், இசையமைப்பாளர் ஹாரிஸ் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. 38 நொடிகள் ஓடும் வீடியோ வெளியான நிலையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் கம்பேக் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டிஜிட்டல் மட்டும் சாட்டிலைட் உரிமையை 37 கோடி ரூபாய் கொடுத்து ஜீ தமிழ் மற்றும் ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது. அதை வீடியோ மூலம் யூடிப்பில் வெளியிட்டனர். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜெயம் ரவியின் வெற்றி படங்களின் வரிசையில் இந்த படமும் அமையும் என்றும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

உண்மையை சொன்னால் ராதா ஜெயிலுக்கு தான் போவார்.. நடிகை அம்பிகா கடும் எச்சரிக்கை!
உண்மையை சொன்னால் ராதா ஜெயிலுக்கு தான் போவார்.. நடிகை அம்பிகா கடும் எச்சரிக்கை!
Varshini Venkat: இளைஞரை மிரட்டி பணம் பறித்த விவகாரம்.. பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது!
Varshini Venkat: இளைஞரை மிரட்டி பணம் பறித்த விவகாரம்.. பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது!
விஜய்க்கு எதிராக ஸ்கெட்ச்.. அஜித் பெயரில் தொடங்கப்பட்ட 2வது கட்சி.. இதுக்கு ஒரு எண்ட் இல்லையா?
விஜய்க்கு எதிராக ஸ்கெட்ச்.. அஜித் பெயரில் தொடங்கப்பட்ட 2வது கட்சி.. இதுக்கு ஒரு எண்ட் இல்லையா?
முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
Hyundai Bayon: புதிய மிட்-சைஸ் எஸ்யுவிக்கான முன்பதிவை தொடங்கிய ஹுண்டாய் - கட்டணம், விலை, அம்சங்கள், ரைவல்?
புதிய மிட்-சைஸ் எஸ்யுவிக்கான முன்பதிவை தொடங்கிய ஹுண்டாய் - கட்டணம், விலை, அம்சங்கள், ரைவல்?
TN Weather News: 5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
Chennai Elevated Corridor: 6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - விவரம்
6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - முழு விவரம்
Embed widget