Jawan Song Hayyoda: ரொமான்ஸ் கிங் ஷாருக் கான் உடன் நயன்தாரா... ஜவான் படத்தின் செம்ம காதல் பாட்டு.. ப்ரோமோ இதோ!
இப்படத்தின் ‘ஹய்யோடா’ எனும் ரொமாண்டி பாடல் நாளை மறுநாள் (ஆக.14) வெளியாக உள்ள நிலையில், இப்பாடலின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் தற்போது பகிர்ந்துள்ளனர்.

நயன் தாரா - ஷாருக்கான் இடம்பெற்றிருக்கும் ஜவான் படத்தின் முன்னோட்ட பாடல் காட்சி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
பாலிவுட்டில் கால் எடுத்து வைத்திருக்கும் கோலிவுட் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் - நயன்தாரா முதன்முதலில் இணைந்திருக்கும் திரைப்படம் ஜவான். நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அனிரு இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ‘ஹய்யோடா’ எனும் ரொமாண்டி பாடல் நாளை மறுநாள் (ஆக.14) வெளியாக உள்ள நிலையில், இப்பாடலின் முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் தற்போது பகிர்ந்துள்ளனர்.
நயன் தாரா - ஷாருக்கானின் ரொமாண்டிக் பாடலான இந்தப் பாடலின் முன்னோட்டக் காட்சியில் ஷாருக் - நயன்தாரா ஜோடி க்யூட்டாக இணைந்திருக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram
ஷாருக்கான் இதனை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்த் வெளியாகி வருகின்றன. நடிகர் ஷாருக்கான் இந்த ஆண்டை பதான் பட வெற்றியுடன் தொடங்கிய நிலையில், தொடர்ந்து வெளியாகும் ஜவான் படமும் வெற்றி பெரும் என்ற உற்சாகத்துடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
முன்னதாக ஜவான் படத்ட்தின், டீசர், ட்ரெய்லர், ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன் தாரா இடம்பெற்றிருக்கும் போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் பட வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஹய்யோடா பாடல் இரண்டாவது சிங்கிளாக வெளியாக உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து கவனமீர்த்து வரும் நிலையில், அவருக்கு இந்தப் படம் பெரும் ப்ரேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜவான்’ படத்தின் இரண்டாவது ஹீரோயினாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இவர்களுடன் பிரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் இப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பில்லா படத்தில் தோன்றியது போல் மெஷின் கன் உடன் நடிகை நயன்தாரா மாஸான கதாபாத்திரத்தில் இப்படக் காட்சிகளில் தோன்றியுள்ள நிலையில், நயன்தாராவின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ஜவான் படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூபில் புதிய சாதனையைப் படைத்தது.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் சமூக வலைதளங்களில் தன் ரசிகர்களுடன் உரையாடும் ask srk நிகழ்வில் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, அட்லீ ஆகியோர் பற்றி நெகிழ்ச்சியுடன் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

