மேலும் அறிய

Jawan: மீண்டும் பில்லா நாயகியாக மாறிய நயன்தாரா... மிரட்டும் விஜய் சேதுபதி... ஜவான் படத்தின் புதிய போஸ்டர்!

ஏற்கெனவே ஷாருக் கானின் போஸ்டர் ஒன்று வெளியான நிலையில் தற்போது படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவரையும் கொண்ட மிரட்டலான போஸ்டரை வெளியிட்டுள்ளது ஜவான் படக்குழு!

செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படத்தின்புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது. முன்னதாக ஷாருக்கானின் போஸ்டர் ஒன்றை படக்குழு பகிர்ந்த நிலையில் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா மற்றும் வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி என அனைவரும் இந்தப் போஸ்டரில் இடம்பிடித்துள்ளனர்.

அட்லீயின் பாலிவுட் என்ட்ரி

ராஜா ராணியில் தன் இயக்குநர் பயணத்தைத் தொடங்கி, நடிகர் விஜய்யை வைத்து இயக்கி சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட்டில் கால் பதிக்க இருக்கிறார். பாலிவுட் கிங்  என ரசிகர்கள் கொண்டாடும் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.

தான் மட்டும் பாலிவுட்டிற்கு செல்லாமல் கோலிவுட்டில் இருந்து ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அட்லீ. அந்த வகையில் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நயன்தாரா ஜவானில் ஹீரோயினாகவும், மற்றொரு ஹீரோயினாக தீபிகா படுகோனும் நடித்துள்ளனர்.

மாஸ் வில்லனாகும் விஜய் சேதுபதி

பவுர்ஃபுல் ஹீரோ, ஹீரோயின் வரிசையில் மாஸ் வில்லனை காட்ட, விஜய் சேதுபதியை தேர்வு செய்துள்ளார் அட்லீ. ஏற்கெனவே பாலிவுட்டில் சில படங்களிலும், வெப் ரீசிஸ்களிலும் கலக்கி வரும் விஜய் சேதுபதியை ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க வைத்துள்ளார் அட்லீ. இவர்களுடன் பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல கோலிவுட் பிரபலங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஜவான் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 

 நீங்க நல்லவரா கெட்டவரா

இந்த நிலையில், ஜவானில் தான் நடித்திருக்கும் போஸ்டரை டிவிட்டரில் பகிர்ந்த ஷாருக்கான், ”நான் நல்லவனா, கெட்டவனா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் 30 நாட்களே உள்ளன. ரெடியா..?” என கேட்டுள்ளார். கையில் ரிவால்வாருடன், கூலிங்கிளாஸ் மற்றும் மொட்டை தலையுடன் மிரட்டும் ஷாருக்கானின் இந்த லேட்டஸ்ட் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஜவான் நல்லவனா, இல்லை கெட்டவனா என்ற விவாதத்தில் இறங்கியுள்ளனர். 

இதுவரை ஜவான் படத்தில் ஷாருக் கானின் போஸ்டர் மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நயந்தாரா மற்றும் வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி அடங்கிய போஸ்டரை முதல் முறையாக வெளியிட்டுள்ளது படக்குழு

இந்த  புது போஸ்டர் தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது. பில்லா படத்தில் துப்பாக்கியுடன் கெத்தாக தோன்றிய நயந்தாராவின் கதாபாத்திரத்தை இந்த போஸ்டர் நினைவுபடுத்துகிறது என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget