Jason Sanjay Vijay | "அப்பா, உங்க கூட இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் கத்துக்குறேன்" - உருகிய ஜேசன் சஞ்சய்
நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து அவரது மகன் சஞ்சய் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் விஜய்க்கு என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் நடிகராக அறிமுகமாகி நேற்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் நடிகர் விஜயின் 29 ஆண்டுகள் நிறைவு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரைப்பிரபலங்களும், அவரது ரசிகர்களும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு அவரது மகன் சஞ்சய் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ 29 வருடங்களை நிறைவு செய்து, அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதற்கு வாழ்த்துக்கள் அப்பா. நான் உங்களுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் நான் கற்றுக்கொண்டதே. வரவிருக்கும் ஆண்டுகளில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் பெற விரும்புகிறேன்.
Congratulations Appa for completing 29 years and being such an inspiring presence to all. Every moment I spend with you is a learning process. Wishing you lot more success and happiness in the years to come @actorvijay ❤️#ThalapathyVijay #29YrsOfVIJAYSupremacy pic.twitter.com/2bCNdQ8Ygu
— Sanjay Vijay (@IamJasonSanjay) December 4, 2021
நடிப்பது, பாடுவது, ஆடுவது, சண்டையிடுவது மற்றும் ரசிகர்களாக பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் கவர்வது அனைத்தையும் இவரால் செய்ய முடியும். 29 ஆண்டுகள் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசாக வலம் வருவது. குறிப்பாக, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றவர்.”
Act, sing, dance, fight, and appeal to audiences big and small, the man with the plan can do it all. 29 years of conquering the silver screen, the box office and most importantly, the hearts of millions of fans.https://t.co/lWexvO6r52#ThalapathyVijay #29YearsOfVIJAYSupremacy
— Sanjay Vijay (@IamJasonSanjay) December 4, 2021
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
விஜயின் மகன் சஞ்சயின் ட்விட்டர் பதிவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். விஜயைப் போன்றே தோற்றத்தில் உள்ள சஞ்சய் விஜய்க்கு இப்போதே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும், அவரை நடிக்க வைப்பதற்காக பல இயக்குநர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இயக்குநராக வேண்டும் என்ற கனவு உள்ள சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சார்ந்த படிப்பை பயின்று வருகிறார். இருப்பினும், சஞ்சய் விஜய் நடனம் ஆடிய வீடியோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்