Jana Nayagan: ஜனநாயகன் படத்தின் “ஃபர்ஸ்ட் ரோர்” வீடியோ வெளியீடு - விஜய் பிறந்தநாள், அப்ப ரீமேக் கன்ஃபார்மா?
Jana Nayagan First Single: விஜய் பிறந்தநாளை ஒட்டி அவரது நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள, “ஃபர்ஸ்ட் ரோர்” வீடியோ வெளியாகியுள்ளது.

Jana Nayagan First Single: தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
“ஃபர்ஸ்ட் ரோர்” வீடியோ வெளியீடு
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜயின் கடைசி திரைப்படமாக, ஜனநாயகன் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், விஜய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதையொட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ஜனநாயகன் படத்தில் விஜயின் தோற்றம் மற்றும் கதாபாத்திரம்தொடர்பான “ஃபர்ஸ்ட் ரோர்” வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
வீடியோவில் இருப்பது என்ன?
வீடியோவின் முதல் வரியே ”என் நெஞ்சில் குடியிருக்கும்” என்ற விஜயின் மிகவும் பிரபலமன வசனம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, “உண்மையான தலைவனின் எழுச்சி என்பது அதிகாரத்திற்கானது அல்ல, மக்களுக்கானது” என்ற வாசகம் தோன்றுகிறது. அதன் தொடர்ச்சியாக, கையில் கத்தியை ஏந்தியபடி, தீப்பற்றி எரியும் ஒரு இடத்தில் காவல்துறை சீருடை அணிந்து கையில் கத்தியை ஏந்தியபடி, அனிருத்தின் பின்னணி இசை ஒளிக்க விஜய் நடந்து வருகிறார். இறுதிக்காட்சியில் , சிறிய கத்தி ஒன்றை கொண்டு தனது மீசையை முறுக்கிவிடுவது போன்று ஃபர்ஸ்ட் ரோர் வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ வெளியான 6 மணி நேரத்திலேயே 22 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று, 3 லட்சத்து 66 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.
அப்ப ரீமேக் கன்ஃபார்மா?
கூடுதலாக ஃபர்ஸ்ட் ரோர் வீடியோவின் தம்ப்நெய்லில் சால் அன் பெப்பர் தோற்றத்தில், கையில் வாளை ஏந்தியபடி ஒரு இருக்கையில் கம்பீரமாக விஜய் அமர்ந்து இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே வெளியான தகவல்களின்படி ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கில் பாலைய்யா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பகவந்த் கேசரியின் ரீமேக் தானோ என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. காரணம், அதிலும் ஃபிளாஷ்பேக்கில் நாயகன் போலீசாகவும், தொடர்ந்து சால்ட் அன் பெப்பர் லுக்கில் வரும் அதிரடி நாயகனாகவும் இருப்பார். அதேபோன்று தோற்றங்களில் தான் ஜனநாயகன் தொடர்பான போஸ்டர்களிலும் விஜய் காட்சியளிக்கிறார். தெலுங்கில் காஜல் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் பூஜா ஹெக்டேவும், தெலுங்கில் வளர்ப்பு மகளாக ஸ்ரீலீலா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் மமிதா பைஜு நடிப்பதாகவும் தெரிகிறது.
ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு:
தீவிர அரசியலில் ஈடுபவடுவதற்கு முன்பாக விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் உருவாகி வருகிறது. கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது. பிசினஸ் அடிப்படையிலான விஜயின் கடைசி படம் என்பதால், ஜனநாயகனின் ஆடியோ ரைட்ஸ், வெளிநாட்டு வெளியீடு உரிமை, ஒடிடி ரைட்ஸ் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்ப்பு உரிமை ஆகியவை இதுவரை இல்லாத அளவில் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளன. அரசியல் கலந்த கமர்ஷியல் திரைப்படமாக ஜனநாயகன் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















