சென்சார் பிரச்னை காரணமாக ஜனநாயகன் திரைப்படம் முதலில் திட்டமிடப்பட்ட டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படவில்லை.
Jana Nayagan Censor: ஜனநாயகன் சென்சார் வழக்கு - விஜய்க்கு ஒற்றை தீர்ப்பு? நீதிபதிகள் ட்விஸ்ட்? முதல் வழக்காக இன்று தீர்ப்பு
Jana Nayagan Censor: தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கின் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது.

Jana Nayagan Censor: சென்சார் பிரச்னை காரணமாக கடந்த 9ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த ஜனநாயகன் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் சென்சார் வழக்கு - இன்று தீர்ப்பு:
தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் மற்றும் சென்சார் குழு இடையேயான சட்டமோதல் அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான இரண்டு தரப்பு வாதங்களும் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று காலையில் முதல் வழக்காக ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் தொடர்பான வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி வழங்கும் தீர்ப்பானது அரசியல் சார்ந்த படமாக உருவாகியுள்ள விஜயின் ஜனநாயகன் உடனடியாக சான்றிதழை பெற்று திரையரங்குகளில் வெளியாகுமா? அல்லது மேல்முறையீடு மூலம் மீண்டும் தாமதத்தை எதிர்கொள்ளுமா? என்பதை இறுதி செய்ய உள்ளது.
ஒற்றை தீர்ப்பா? நீதிபதிகள் ட்விஸ்டா?
வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமர்வு ஒற்றை கருத்தை எட்டி ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கலாம். அல்லது ஒருவர் இருவேறு மாதிரியான தீர்ப்புகளும் அறிவிக்கப்படலாம். அப்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டால், வழக்கு உடனடியாக முடிவுக்கு வராமல் மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்படும். அவர் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து, இரண்டு தரப்பு கருத்துகளையும் கேட்டறிவார். அதன் பிறகு இறுதி தீர்ப்பை அறிவிப்பார். கணிப்புகளின்படி பிளவுபட்ட தீர்ப்புக்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் ஜனநாயகன் திரைப்பட வழக்கில் ஒருமித்த முடிவுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சட்ட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
பிரச்னை என்ன?
கடந்த டிசம்பர் மாதம் படத்தை தணிக்கை குழுவிடம் சமர்பித்த பிறகு சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதனை பூர்த்தி செய்தபிறகு U/A சான்று வழங்கப்படும் என சென்சார் போர்ட் வாய்மொழியாக தெரிவித்துள்ளது. இதனிடையே, ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தீவிரமாக விளம்பரங்களும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த சூழலில் தான், ஜனவரி 5ம் தேதி படம் தொடர்பாக புகார் ஒன்று வந்து இருப்பதால், மறு ஆய்வுக்கு உட்படுத்துவதாக சென்சார் போர்ட் தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்டார். அதனை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அரசியல் பயணத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படம் என்பதால், ஜனநாயகன் படத்தின் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி படத்தை வெளியிட்டு, வசூலை அள்ள தயாரிப்பு நிறுவனமும் மும்முரமாக செயல்பட்டது. ஆனாலும், கடைசி நேர தாமதங்களால் விஜய் ரசிகர்கள், திரைத்துறை நலம்விரும்பிகள், தவெக தொண்டர்கள் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தங்களுக்கான நிவாரணமாக உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு அமையுமா? என்பதே விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Frequently Asked Questions
ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஏன் ஒத்திவைக்கப்பட்டது?
ஜனநாயகன் சென்சார் வழக்கு இன்று தீர்ப்பளிக்கப்படுமா?
ஆம், ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. தீர்ப்பு படத்தின் வெளியீட்டை இறுதி செய்யும்.
ஜனநாயகன் படத்திற்கு என்ன பிரச்னை?
படத்திற்கு U/A சான்று வழங்குவதாக சென்சார் போர்டு கூறியது, ஆனால் பின்னர் ஒரு புகார் காரணமாக மறு ஆய்வுக்காக படத்தைக் கேட்டது.
நீதிபதிகள் பிளவுபட்ட தீர்ப்பு வழங்கினால் என்ன நடக்கும்?
மாறுபட்ட தீர்ப்பு அளிக்கப்பட்டால், வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றப்படும், அவர் இறுதி தீர்ப்பை அறிவிப்பார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















