தியேட்டரில் ரூ.15 ஆயிரம் கோடி வசூல்.. ஓடிடியிலும் வெளியான அவதார் 2 படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படத்தின் இரண்டாம் பாகம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியான நிலையில் அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார் : ’தி வே ஆஃப் வாட்டர்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியது. பிரம்மாண்டத்திற்கு பெயர்போன ஜேம்ஸ் காமரூன் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். மோஷன் கேப்ச்சர் என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட அவதார் திரைப்படம் உலகம முழுவதும் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது.
பெரும் எதிர்பார்ப்பிற்குப் பின் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகம் வெளியாகி கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது. சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா , ஸ்டிஃபன் லாங் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். உலகம் முழுவடு 160 மொழிகளில் 52,000 திரையரங்குகளில் வெளியானது அவதார் தி வே ஆஃப் வாட்டர். மிக பிரமாணடமாக அதிநவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் 15,000 கோடிகளை வசூல் செய்தது. முதல் பாகத்தைப் போல் இல்லாமல் இரண்டாம் பாகம் கலவையான விமர்சானங்களை பெற்றது. தற்போது இன்றிலிருந்து டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட இருக்கிறது இத்திரைப்படம்.
1982 ஆம் ஆண்டு பிர்ரானா திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஜேம்ஸ் கேமரூன். பிர்ரானா திரைப்படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை. இதற்குப் பிறகு டர்மினேட்ட திரைப்படத்தின் மூலம் இயக்குனர் என்கிற அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டார் கேமரூன். டெர்மினேட்டர் படத்தின் கதை தனது கனவில் வந்ததாக தெரிவித்திருக்கிறார். 1997 ஆம் ஆண்டு உலகமே கொண்டாடிய டைடானிக் படத்தை இயக்கினார் கேமரூன்.
ஹாலிவுட்டில் மட்டுமில்லாமல் உலகளவில் இருக்கும் திரைப்பட ரசிகர்களிடம் ஜேம்ஸ் கேமரூன் என்கிற பெயர் பிரபலமானது. அந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் அத்தனை விருதுகளையும் தட்டிச் சென்றது டைடானிக். மொத்தம் 14 வகைகளின் கீழ் விருதுகளுக்குத் தேர்வாகியிருந்தது இந்தப் படம். அதில் 11 விருதுகளை வென்றது. இந்தப் படத்தில் இருந்து ஜேம்ஸ் கேமரூன் தனது பிரம்மாண்டத்திற்காக அறியப்பட்டார். ஒரு படத்திற்கும் அடுத்தப் படத்திற்கும் நீண்ட காலம் இருந்தாலும் இவரது படங்களை மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
அவதார் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பாகங்களை இயக்கத் திட்டமிட்டிருக்கிறார். மூன்றாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் நான்காவது பாகம் 2026 இல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.