ஜூலிக்கு 3 காதலர்களா? காதலன் மீதான புகாரில் அவிழும் முடிச்சுகள்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உலகப்புகழ் பெற்ற ஜூலி 3 பேரை காதலித்ததாக கூறப்படுகிறது.

ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகள் உலகளவில் பிரபலமானவை. அப்படி நகர்ந்து நம்ம ஊருக்கு வந்தது தான் பிக்பாஸ். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு, பிக்பாஸ் முதல் பாகம் மூலம் மீண்டும் பிரபலமானவர் ஜூலி. இவர் அதற்கு பிறகு தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிவரும் வேளையில் சமீபத்தில் தனது காதலன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், திருமணம் செய்வதாக கூறி தன்னிடம் நகை, பணம், பல்சர் பைக் ஆகியவற்றை ஏமாற்றி வாங்கிவிட்டதாகவும், இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடியதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது. ஜூலி அவரது காதலன் மீது அளித்த புகாரை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவரை கமெண்ட் செய்து வந்தனர்.
இந்தநிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படுபிஸியான ஜூலி, மாடலிங், போட்டோஷூட், நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர் என அனைத்திலும் கலந்துகொண்டு வருமானம் அதிகம் என கூறப்படுகிறது. கடந்த 2017 ம் ஆண்டு ஒருவரை காதலித்து வந்த ஜூலி, அதன்பிறகு சில கருத்துவேறுபாடு காரணமாக அந்த நபரை கழட்டிவிட்டதாகவும், அதன் பிறகு மனிஷ் என்ற நபரை உருகி உருகி காதலித்து அவருக்கே இந்த நகை, பணம், பல்சர் பைக் என வாங்கிக்கொடுத்து தன் அளவுகடந்த அன்பை வெளிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, 3 வது நபர் மேல் வந்த ஈர்ப்பு காரணமாக ஜூலி, அந்த நபரிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனிஷ் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவிக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு, ஜூலியுடன் மனிஷ் பேசவில்லை என்றும், பொறுமையாக இருந்த ஜூலி ஒரு கட்டத்தில் தான் அன்பாக கொடுத்த நகை, பணம், பல்சர் பைக்கை என அனைத்தையும் ஏமாற்றி வாங்கிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
View this post on Instagram
வழக்கு தொடர்ந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜூலி இன்னொருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே 2 வது காதலன் மீது புகார் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு பிறகு, ஜூலி தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், வேலை வெட்டி இல்லாத சில நபர்கள் தொடர்ந்து தன்னை கிண்டல் செய்து வருவதாகவும், கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் இவர்களை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருது என்றும் தெரிவித்துள்ளார்.
இதைப்பார்த்த ஜூலி எதிர்ப்பாளர்கள், 90' ஸ் கிட்ஸுக்கு ஒன்னு அமையலே... உங்களுக்கு 3 காதலர்களா ...? என்று கமெண்ட் பக்கத்தில் கருத்துகளை நிரப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















