Jailer Update : நெல்சனுக்கு ரஜினிகாந்த் கொடுத்த கிஃப்ட் இதுதான்.. ஷூட்டிங் இங்கதான்.. ஜெயிலர் அப்டேட்
அண்ணாத்த போலவே, ஜெயிலர் படப்பிடிப்பின் பெரும்பகுதி ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது.
ஜெயிலர் :
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்' . இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.இப்படம் ரஜினிகாந்தின் 169 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் லுக் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது படம் குறித்த சில அப்டேட்ஸ் இணையத்தில் கசிந்துள்ளது.
#Jailer pic.twitter.com/vnJmccaQZy
— Sun picture (@ImranBa24810528) July 13, 2022
ஜெயிலர் அப்டேட்:
அண்ணாத்த போலவே, ஜெயிலர் படப்பிடிப்பின் பெரும்பகுதி ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் கதையில் தனக்காக எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டாம். உங்கள் விருப்பப்படி எடுங்கள் என முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளாராம். ஸ்கிரிப்டைத் தவிர, மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை தனக்குத் தகுந்தாற்போல் ஒப்பந்தம் செய்யுமாறு படத் தயாரிப்பாளரிடம் ரஜினி கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
#Jailer Update💥#Jailer set work preparations are underway in Hyderabad
— Kerala Rajini Bloods (@Rajinikeralafan) July 12, 2022
Shooting starts from August 10.#Thalaivar169 #Rajinikanth @rajinikanth @sunpictures @Nelsondilpkumar @anirudhofficial #thalaivar pic.twitter.com/AbQYKmt1qI
எப்போ ரிலீஸ் ?
ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. படம் வருகிற ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கி , 2023 பொங்கல் பண்டிகையன்று திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் ஜெயிலர் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.