மேலும் அறிய

Jailer release: ரஜினிக்கு ராசியில்லாத ஆகஸ்ட்..! வரலாற்றை மாற்றி எழுதுவாரா ஜெயிலர்..? பாபா, குசேலன் வரிசையில் சேர்வாரா?

இதுவரையில் ஆகஸ்ட் மாதம் வெளியான ரஜினியின் பாபா மற்றும் குசேலன் படங்கள் தோல்வியடைந்தால், ஜெயிலர் படத்தின் நிலை என்ன ஆகும் என மிரண்டு போய் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் ராக் ஸ்டார் அனிருத். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பான் இந்திய படமாக உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியை படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது. 

ரஜினிகாந்த் - ஜெயிலர்
ரஜினிகாந்த் - ஜெயிலர்

அரண்டு போன ரஜினி ரசிகர்கள் :

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதால் சுதந்திர தின விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. ரிலீஸ் தேதி வெளியானதிலிருந்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் சலனம் ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி நடித்த குசேலன் மற்றும் பாபா திரைப்படங்கள் இதே ஆகஸ்ட் மாதத்தில் தான் திரையரங்குகளில் வெளியாகின.

இந்த இரு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியை  கொடுக்காமல் தோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினி நடித்த ஜெயிலர்  திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாவதால் சென்டிமென்ட் காரணமாக இது சரியாக வருமா? என அரண்டு போய் உள்ளனர் ரஜினி ரசிகர்கள். இந்த செண்டிமெண்ட் கருதி ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏதாவது மாற்றம் இருக்குமா அல்லது அறிவித்த படி ஆகஸ்ட் 10ம் தேதியே படம் வெளியாகுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.  

ஜவான் - ஜெயிலர்- மாவீரன்
ஜவான் - ஜெயிலர்- மாவீரன்

ரஜினியுடன் மோதும் எஸ்.கே :

மேலும் ரஜினியின் 'ஜெயிலர்' படத்துடன் நேரடியாக காலத்தில் மோத உள்ளது சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' திரைப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் மொழிகளில் வெளியாகும் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானதும் 'மாவீரன்' ரிலீஸை முன்கூட்டியே ஜூலை மாதத்தில் வெளியிடலாமா அல்லது அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கலாமா என ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாவீரன் படம் மட்டுமின்றி வேறு சில படத்தின் ரிலீஸ் தேதியும் ஜெயிலர் படத்தின் ரிலீஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. 

ஒதுங்கிய ஜவான் :

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளீரோய்ன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' படத்தை ஆகஸ்ட் 10ம் வெளியிட திட்டமிடப்பட்டதாகவும் 'ஜெயிலர்' படம் வெளியாவதால் அதன் ரிலீஸ் தேதியையும் ஒத்திவைக்க இருப்பதாகவும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.      

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
Embed widget