Jailer: அடேங்கப்பா... ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம்... ரஜினிகாந்த், மோகன்லாலுக்கு இத்தனை கோடிகளா!
Jailer cast salary details: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க நடிகர்கள் பெற்றுள்ள சம்பள விவரம் வெளியாகி வாயைப் பிளக்க வைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் (Jailer). இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், சிவராஜ் குமார்,சுனில்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்னர் வெளியான 'ஜெயிலர்' படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே போல ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஹுக்கும்’ பாடல் அசத்தலான வரவேற்பு பெற்று ட்ரெண்டிங் லிஸ்டிங் முதலிடத்தில் தக்க வைத்து வருகிறது.
ஆகஸ்ட் 10ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ஜெயிலர் படத்திற்காக மிகவும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். படத்தின் ப்ரீ புக்கிங் நேற்று இரவு முதல் கமலா திரையரங்குகளில் தொடங்கியது. ஜெயிலர் படத்திற்கு ப்ரீ புக்கிங் செய்வதில் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் படம் ரிலீஸ் என்றாலே வேற லெவலில் எதிர்பார்ப்பு இருந்து வரும் சூழலில் ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக நடிகர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.
பொதுவாகாவே ரஜினிகாந்த் தான் நடிக்கும் படங்களுக்கு 100 - 120 கோடி வரை சம்பளமாக பெறுவாராம். அந்த வகையில் ஜெயிலர் படத்துக்கு 80-100 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல் கூறுகின்றன. கேமியோ ரோலில் நடிப்பதற்காக மலையாள மாஸ் நடிகர் மோகன்லால் 8 கோடி வாங்கியுள்ளதாகவும், 10 நிமிடத்திற்கும் குறைவாகவே அவர் இப்பாடத்தில் தோன்றியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
படையப்பா படத்தில் நீலாம்பரியாக திரையை தெறிக்க விட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையை சூப்பர் ஸ்டாருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் படத்தில் மிஸ்ஸான இவர்களின் கெமிஸ்ட்ரி இப்பாடத்தில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க அவர் 80 லட்சம் வரை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க 4 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்றும், கன்னட நடிகர் சிவராஜ்குமார் 2- 4 கோடி வரை சம்பளமாக பெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
பொதுவாக 5 கோடி வரை சம்பளமாக பெரும் நடிகை தமன்னா ஜெயிலர் படத்துக்காக 2-4 கோடி வரை பெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து இருந்த 'காவாலய்யா' என்ற பாடல் மாபெரும் ஹிட் பாடலாக அமைந்துள்ளது. பட்டி தொட்டி எங்கும் சக்கைப்போடு போடும் இந்தப் பாடலுக்கு ஏராளமானோர் ரீல்ஸ் செய்து மகிழ்ந்து வருகிறார்கள்.