மேலும் அறிய

Jailer Box Office collection : இன்னும் ஒரே வாரத்தில் பாருங்க.. ரூ.500 கோடியை நெருங்கும் ஜெயிலர்..

Jailer Box Office Collection: ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் விரைவில் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக கடந்த வாரம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகெங்கிலும் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்திய படமாக வெளியான ஜெயிலர் தமிழகத்தில் மட்டும் 1200 திரையரங்குகளிலும் உலகளவில் சுமார் 7000 திரையரங்குகளிலும் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பெரிய பொருட்செலவில் உருவான இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Jailer Box Office collection : இன்னும் ஒரே வாரத்தில் பாருங்க.. ரூ.500 கோடியை நெருங்கும் ஜெயிலர்..

வசூல் வேட்டை :

தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு, சுனில் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் ஆக்ஷன், காமெடி, ஸ்டைல் என பட்டையை கிளப்பி முதல் நாள் முதல் வசூல் வேட்டை செய்து வருகிறது. முதல் நான் ஓப்பனிங் மட்டுமே ரூ.20 கோடியை எட்டியது என கூறப்படுகிறது. 

ரிப்பீடட் ஆடியன்ஸ்:

ரஜினியின் கடைசி படமான அண்ணாத்த  சரியாக ஹிட்டாகாத நிலையில், கவலையில் இருந்த ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் வகையில் ஜெயிலர் படம் அமைந்துள்ளது. மேலும் மாஸான பழைய ரஜினிகாந்தை பார்த்தது போல இப்படம் அமைந்ததால் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் என்பதால் ரசிகர்களை குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு வரவைக்க காரணமாக அமைந்தது. மேலும் ரிபீடட் ஆடியன்ஸ் வருகையும் அதிகமாக உள்ளது. 

 

Jailer Box Office collection : இன்னும் ஒரே வாரத்தில் பாருங்க.. ரூ.500 கோடியை நெருங்கும் ஜெயிலர்..

விரைவில் 500 கோடி :

வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டிய ஜெயிலர் திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் டல்லாக இருந்து வருவதாகவும் வார இறுதி நாட்களில் மீண்டும் வசூல் எகிறும் என்றும் கூறப்படுகிறது. நேற்றைய நிலவரத்தின் படி உலகளவில் ரூ.375.40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.250 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது இன்னும் சில வாரங்களில் 500 கோடியை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. 

புதிய சாதனை :

சமீபத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு விழாவில் 'ஜெயிலர்' திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்றும் 1000 கோடி ரூபாய் வரை வசூலை குவிக்கும் என்றும் இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் குதிக்க வைத்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு சென்ற அதிமுக
தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு சென்ற அதிமுக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Embed widget