Jai on Breaking News: சயின்ஸ் ஃபிக்சன் ஜானர்.. சூப்பர் ஹீரோவாக என்ட்ரியாகும் ஜெய்.. என்ன படம் தெரியுமா?
நடிகர் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது
நடிகர் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது
ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் இந்தப்படத்தை தயாரிக்கிறார். சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இந்தப்படத்திற்கு BREAKING NEWS என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் ஜெய் ஆக்ஷன் காட்சிகளில் ரோபாக்களுடன் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை பானு ஸ்ரீ நடிக்கிறார். இவர்களுடன் ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும், சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ பாண்டியன். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறதாம்.