மேலும் அறிய

Maanaadu | வசூல் போஸ்டரால் மனக்கசப்பு? மாநாடு விழாவுக்கு சிம்பு ஏன் ஆப்சென்ட் தெரியுமா?

டைம் லூப் கான்செப்ட்டும், அதனை கூறிய விதமும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றதால் மாநாடு மாஸ் ஹிட்டடித்தது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி சமீபத்தில் வெளியான படம் மாநாடு(Maanaadu). சிம்பு கதாநாயகனாக நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருந்தார். இப்படத்தில்

எஸ்.ஜே. சூர்யா, ப்ரேம் ஜி, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படப்பிடிப்பின் போதே பல சர்ச்சைகளை சந்தித்த மாநாடு  தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதிலும் சொதப்பியது. பல தடைகளைத் தாண்டி கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியானது மாநாடு.

டைம் லூப் கான்செப்ட்டும், அதனை கூறிய விதமும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றதால் மாநாடு மாஸ் ஹிட்டடித்தது. சிம்புவின் ரீ எண்ட்ரி மாஸாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடினர். வசூலிலும் மாநாடு எதிர்பாராத இலக்கை தொட்டது. இதனை சமீபத்தில் படக்குழு கொண்டாடியது. படத்தில் வெற்றி விழா கொண்டாட்டப்பட்டது. ஆனால் படத்தில் நாயகன் வெற்றி விழாவுக்கு ஆப்செண்ட் ஆனார். இது குறித்து மேடையிலேயே கண்டனத்தை பதிவு  செய்த விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ் ஏ சி, வெற்றி என்றதும் சிம்பு இப்படி செய்யக் கூடாது என்றார். அவர் வந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங் பரபரப்பாக சென்றுகொண்டிருப்பதால் சிம்பு வரவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால் காரணம் அது இல்லையாம். பட வசூல் தொடர்பாக போஸ்டர் அடிப்பதில் தான் சுரேஷ் காமாட்சிக்கும், சிம்புவுக்கும் சிக்கலானதாகவும், அதனால் சிம்பு விழாவை புறக்கணித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது. மாநாடு 108 கோடு ரூபாய் வசூல் செய்ததாக ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட சிம்பு விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் வசூல் தொடர்பாகவெல்லாம் வெளிப்படையாக பேசினால் வருமான வரித்துறை பிரச்னை வரும் என்பதால் சுரேஷ் காமாட்சி மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் தான் சிம்பு விழாவை புறக்கணித்ததாகவும் தெரிகிறது. ஒன்னொரு காரணமும் கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது. 

படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த்  ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில்  டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த சம்பவமும் சிம்புவின் ஆப்செண்டுக்கு காரணமோ எனக் கூறப்படுகிறது.


Maanaadu | வசூல் போஸ்டரால் மனக்கசப்பு? மாநாடு விழாவுக்கு சிம்பு ஏன் ஆப்சென்ட் தெரியுமா?

இதற்கிடையே மாநாடு படம் எந்த ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருந்தது. இந்தச் சுழலில் மாநாடு சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓடிடியில் வெளியாகும் தேதி மட்டும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மாநாடு திரைப்படம் டிசம்பர் 24-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget