வெளியாகும் ஓடிடி தளங்களின் சுயரூபம்..ரிலீஸ் தேதி மாற்றத்திற்கு இதான் காரணமா ?
தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு பெரும் தொகையை வழங்கிய ஓடிடி நிறுவனங்கள் தற்போது தங்களது நிதியை 60 சதவீதம் வரை குறைத்துள்ளன

ஓடிடி தளங்கள்
ஓடிடி தளங்களின் வருகைக்கு நிறைய எதிர்ப்புகள் தொடக்கத்தில் இருக்கவே செய்தது. ஆனால் கொரோணா நோய்தொற்று பரவலின் போது ஓடிடி தளங்கள் மக்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தன. சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் பல எதிர்ப்புகளைக் கடந்து நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. தொடர்ந்து , மகான் ,சார்பட்டா என பல படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகின. திரையரங்கத்திற்கு சென்று மக்கள் படங்களைப் பார்த்தாலும் ஓடிடி தளங்கள் தங்களது மார்கெட்டை வேகமாக பெரிதாக்கின.
தயாரிப்பார்களுக்கு அதிக லாபம் , நடிகர்களுக்கு உயர்ந்த சம்பளம் என ஓடிடி தளங்கள் மற்ற திரைத்துறையைப் போலவே தமிழ் திரைத்துறையையும் ஆக்கிரமித்தன. பெரும்பாலான திரைக்கலைஞர்கள் ஓடிடி தளங்களின் வருகையை வரவேற்றனர். ஆனால் தொடங்கியதற்கு நேர் மாறான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது
ரிலீஸ் தேதியை தீர்மாணிக்கு ஓடிடி தளங்கள்
தொடக்கத்தில் கோடி கணக்கில் பணத்தை முதலீடு செய்த ஓடிடி நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 60 சதவீதம் வரை செலவரை குறைத்துள்ளதாக வர்த்தக நிபுனர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுமட்டுமில்லாமல் திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகளிலும் பல வித மாற்றங்களை செய்ய சொல்லி ஓடிடி நிறுவனங்கள் தயாரிப்பாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்றன.
இதனால் படங்களை தங்கள் நினைத்த தேதியில் ரிலீஸ் செய்யமுடியாமல் போதிய திரையரங்குகள் கிடைக்காத நிலையே ஏற்படுகிறது. ஓடிடி நிறுவனங்களிடம் பெரியளவில் லாபமும் கிடைககமல் அவர்களின் செளகரியத்திற்காக ரிலீஸ் தேதியை மாற்றும் கட்டாயத்திற்கு தயாரிப்பாளர்கள் உள்ளாகி வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சேர்ந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளன.
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி , தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ ஆகிய மூன்று படங்கள் உள்ளிட்ட என நிறைய படங்கள் ஓடிடி தளங்கள் கொடுக்கும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் படிக்க :Ilaiyaraja : எத்தனை பங்களா உள்ளது..? நீதிமன்றத்தின் கேள்விக்கு இளையராஜா நெத்தியடி பதில்
சாய் பல்லவிக்கு அதிர்ந்த அரங்கம்..ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த கீர்த்தி சுரேஷ் , ராஷ்மிகா
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

