Tabu : படுக்கைக்கு மட்டும் ஆம்பள இருந்தா போதும்..நடிகை தபூ சொன்னதாக இணையத்தில் பரவும் தகவல்
Actress Tabu : படுக்கைக்கு மட்டும் தனக்கு ஒரு ஆண் இருந்தால் போதும் என நடிகை தபூ சொன்னதாக இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது

தபூ சொன்னதாக பரவி வரும் இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியாமல் சமூக வலைதளத்தில் இதனை பலர் பரவி வருகிறார்கள். இப்படியான நிலையில் நடிகை தபூ தரப்பிடமிருந்து இந்த கருத்து குறித்த விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
காதல் தேசம் திரைப்படத்தின் வழியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை தபூ. தொடர்ந்து அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்பட்டவர். இந்தியில் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.
படுக்கை மட்டும் ஆண் இருந்தால் போதும்
54 வயதான தபூ இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக இருந்து வருவது அடிக்கடி பேசுபொருளாகி வரும் ஒன்று. இதுகுறித்து தபூ கூறுகையில் தான் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை என்றும் தனியாக இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகவும் முன்னதாக கூறியுள்ளார்.
தற்போது தபூ சொன்னதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது . அதாவது " படுக்கைக்கு மட்டும் எனக்கு ஒரு ஆண் இருந்தால் போதும் . மற்றபடி நான் தனியாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என தபூ கூறியுள்ளதாக இந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்
தபூ சொன்னது உண்மையா ?
ஆனால் தபூ இந்த தகவலை எந்த ஒரு பேட்டியிலும் சொன்னதற்கான ஆதரங்கள் இல்லை. இதே தகவல் கடந்த ஆண்டும் சமூக வலைதளத்தில் வைரலானது. தன்னைப் பற்றி போலியானவை என்றும் இந்த தகவலை பரப்புபவர்கள் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தபூ தரப்பினரிடம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது மறுபடியும் இந்த ஆண்டு இதே தகவல் திட்டமிட்டு சிலரால் பரப்பப்படுகிறது.
🤝👌💥 pic.twitter.com/v1HuIQ2Ubv
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 19, 2026





















