மேலும் அறிய

விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!

கிள்ளியூரியில் 1144 எக்டேரில் அணுக்கனிம  சுரங்கம் அமைக்க மாநில அரசு துணை போவதா?  மக்களின் உணர்வுக்கு எதிரான ஆணையை ரத்து செய்யுங்கள் -அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1,144 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்குத் துணை போகும் வகையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில்., 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1144  எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தின் முயற்சிக்கு தமிழக அரசு துணை போயிருக்கிறது.  கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு  தெரிவித்து வரும்  திட்டத்திற்கு  ஆதரவாக தமிழக அரசு அவசர அவசரமாக  ஆணை பிறப்பித்திருப்பது  ஏற்றுக்கொள்ளத்தக்கல்ல.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு (Indian Rare Earths Limited) தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1817  எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க  2015-ஆம் ஆண்டில் மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பான  அணுசக்தித் துறையின் கோரிக்கையை ஆய்வு செய்த  தமிழக அரசு 1144  எக்டேர்  நிலத்தில்  அணுக்கனிம சுரங்கம் அமைக்க 2020-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது.  அதைத் தொடர்ந்து அந்த நிலங்களை  அணுக்கனிமச் சுரங்கம்  அமைக்க ஒதுக்கீடு செய்து 11.06,2021-ஆம் நாள் மத்திய அரசு  ஆணை பிறப்பித்தது.

அதன் தொடர் நடவடிக்கையாக அங்கு அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம்  2024-ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 28.09.2024-ஆம் நாள்  அறிக்கை வெளியிட்டேன். மேலும் கன்னியாகுமரி உள்ளிட்ட  தென் மாவட்ட மக்களும் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  ஆனாலும், அணுக்கனிம சுரங்கத்தை அமைக்க வேண்டும் என்பதில்  உறுதியாக இருந்த மத்திய அரசு,  டங்ஸ்டன், தாமிரம், நிக்கல்,  பிளாட்டினம் உள்ளிட்ட 24 வகையான  முக்கியக் கனிமங்களையும், தோரியம், யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 வகையான அணுக் கனிமங்களையும் தோண்டி எடுப்பதற்கான சுரங்கங்களை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை என்றும்,  இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்றும்  2025-ஆம் ஆண்டில் மத்திய அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும்,  மக்களின் எதிர்ப்பு காரணமாக அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டிருந்தன.  அனுக்கனிம சுரங்கம் அமைக்க 1144  எக்டேர் நிலங்களை ஒதுக்கி 11.06.2021 ஆம் நாள் மத்திய அரசு பிறப்பித்த ஆணை ஐந்தாண்டுகளுக்கு மட்டும் தான் என்பதால், இந்தத் திட்டம் காலாவதியாகி விட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நில ஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து கடந்த 10.06.2026-ஆம் நாள்  தமிழக அரசு, அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி அரசாணை பிறப்பித்திருக்கிறது.  அதிலும்  நிலம் ஒதுக்கப்பட்ட  ஆணை பிறப்பிக்கப்பட்டு  5 ஆண்டுகள் முடிவடையும்  கடைசி நாளில் இந்த  ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  இந்திய அருமணல் ஆலை ஒரு சில அனுமதிகளை மட்டும் அணுக்கனிம சுரங்கத்தை அமைத்து விட முடியும். இதன் மூலம் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு  சரி  செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள்  ஏற்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள கிள்ளியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் அணுக்கதிர்வீச்சு நிலவும் பகுதிகள் ஆகும். மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள மக்கள், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.   அத்துடன் கூடுதலாக  இப்போது அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், அங்குள்ள மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும். இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு  துணை போவதை ஏற்க முடியாது.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும் மக்களின் விருப்பப்படி தான் செயல்பட வேண்டும். ஆனால், மக்களின் விருப்பத்திற்கு மாறாக கிள்ளியூரில்  அணுக்கனிம சுரங்கம் அமைக்க 1144  எக்டேர்  நிலம் ஒதுக்கிய ஆணையின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து  பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுத்தியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Embed widget