மேலும் அறிய

Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?

தங்கத்தின் விலை இன்று காலையில் குறைந்திருந்த நிலையில், பிற்பகலில் விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் உயர்வை கண்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால், பிற்பகலிலேயே சவரனுக்கு 1,360 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தங்கத்தின் மீதான ஆர்வம்

தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் திருமண விஷேசங்கள், பிறந்தாள் கொண்டாட்டங்கள், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாங்கி வருகிறார்கள். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வதால் எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்ற காரணத்தால் அதிகமானோர் தங்கத்தில் முதலீட்டை செலுத்தி வருகிறார்கள். மேலும் நடுத்தர வர்க்க மக்களுக்கு அவசர தேவைக்கு அட்ஷய பாத்திரமாகவும் தங்க நகைகள் இருப்பதால், எந்த நேரமும் விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ முடியும் என்பதால் தங்களால் முடிந்த அளவு தங்க நகைகளை சிறுக, சிறுக சேமித்து வருகிறார்கள்.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 3 முதல் 4 வருடத்தில் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 3 வருடத்திற்கு முன்பாக ஒரு சவரன் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கம் விலை 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து படிப்படியாக குறைந்த தங்கம் விலை தற்போது ஒரு லட்சத்து 5ஆயிரம் முதல் 1.15 லட்சம் என்ற அளவில் கடந்த 3 மாதமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா போர் ஓய்ந்த நிலையில் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. எனினும், தற்போது சர்வதேச சந்தையில் விலை உயர்வு ஏற்பட்டதையடுத்து, பிற்பகலில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

  • ஜூன் 26-ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 1280 ரூபாய் அதிகரித்து 1,06,400 ரூபாய்க்கும் விற்பனை.
  • ஜூன் 27-ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,370 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 106,960 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன் 28-ஆம் தேதி தங்கம் விலை மாற்றம் இல்லை
  • ஜூன் 29-ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,06,400 ரூபாய்க்கும் விற்பனை.

இன்றைய தங்கம் விலை என்ன.?

வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலையானது குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது காலையில் அதிரடியாக சரிந்தது. அதன்படி, கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,04,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பிற்பகலில் தங்கத்தின் விலை கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம், 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,360 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,05,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் உயர்வு

இதேபோல், வெள்ளியின் விலையும் பிற்பகலில் அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையானது இன்று காலையில் கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பிற்பகலில் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் மீண்டும் 245 ரூபாய்க்கு வந்தது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget