மேலும் அறிய

TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?

TATA Sierra EV Launched: டாடா சியரா இ.வி. காரில் அதிக திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட உள்ளது. இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் கிடைக்கும்.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • 665கிமீ ரேஞ்ச், 5.8விநாடிகளில் 100கிமீ, வாழ்நாள் பேட்டரி வாரண்டி.
  • பிரீமியம் உட்புறம், ADAS, 360° கேமரா; விலை ரூ.18.79 லட்சம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புகழ்பெற்ற மற்றும் ஐகானிக் மாடலான சியரா எஸ்யூவியை எலெக்ட்ரிக் வடிவில் (Tata Sierra EV) களமிறக்கி உள்ளது.

இந்த புதிய எலெக்ட்ரிக் கார் இன்று (ஜூன் 30-ம் தேதி) சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முழுமையான விவரங்கள் பின்வருமாறு:

வடிவமைப்பு மற்றும் தோற்றம்

பழைய டாடா சியரா காரின் முக்கிய அடையாளமான பின்பக்க வளைந்த கண்ணாடி அமைப்பு இந்த புதிய மாடலிலும் நவீன முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் பானட்டை ஒட்டி நீளமான எல்இடி லைட் பார், கவர்ச்சிகரமான மற்றும் மஸ்குலரான பம்பர்கள், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், ஸ்போர்ட்டியான அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் எதிர்காலத்திற்கு ஏற்ற பிரீமியம் தோற்றத்தில் டாடா சியரா கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடாவின் பிரத்யேக எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் (Acti.ev) இது உருவாக்கப்பட உள்ளது.

ரேஞ்ச் மற்றும் பேட்டரி செயல்பாடு

டாடா சியரா இ.வி. காரில் அதிக திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட உள்ளது. இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரப் பயணங்களுக்கு எந்தவிதத் தடங்கலும் இல்லாத வகையிலும், அதிவேகமாக சார்ஜ் ஏறும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடனும் டாடா சியரா கார் வெளிவர உள்ளது. அதேபோல Quad Wheel Drive எனப்படும் புது அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதன்படி ஒவ்வொரு 2 வீல்களுக்கு தலா 1 மோட்டார் என 2 மோட்டார்கள் அறிமுகமாகி உள்ளன. இதன்மூலம் வண்டியின் டார்க், ஸ்டெபிளிட்டி ஆகியவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உட்புற வசதிகள்

காரின் கேபின் மிகவும் பிரீமியம் தரத்தில் தாராளமான இட வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் தேவையில்லாத பட்டன்கள் இல்லாமல் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஒளிரும் டாடா லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்கு சொகுசான அனுபவத்தைத் தர, இருக்கைகள் லாஞ்ச் அமைப்பில் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளான ஏடிஏஎஸ்,மல்டிபிள் ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அனைத்து நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இந்த காரில் இடம்பெற உள்ளன.

லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி

டாட்டா சியரா காரின் பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்ட்டி அளிக்கப்படுவதாக அறிமுக விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கார் 0 – 100 கி.மீ.வேகத்தை வெறும் 5.8 விநாடிகளில் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 KWh- 665 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும்  63 KWh - 565 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும்  மேலும் 15 நிமிடத்தில் 263 கி.மீ. ரேஞ்ச் டாப் அப் செய்ய முடியும் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் இதன் அடுத்த சிறப்பு அம்சம் ஆகும். 

டாடா சியரா EV விலை எவ்வளவு?

டாடா சியார காரின் ஆரம்ப விலை ரூ.18.79 லட்சம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோ ரூம் விலை ஆகும்.

எனினும் ப்ரீமியம் எலக்ட்ரிக் எஸ்யுவி பட்டியலில் இந்த விலை என்பது வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேர்வாகவே இருக்கும்.

ஜூலை  15 முதல் வாடிக்கையாளார்களுக்கு டெலிவரி செய்யப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

kia SUV: உள்ளூர் தயாரிப்பு..! பட்ஜெட்டில் வாட்டசாட்டமான 2 எஸ்யுவிக்கள் - தென்கொரிய கார்களின் முழு விவரங்கள்
உள்ளூர் தயாரிப்பு..! பட்ஜெட்டில் வாட்டசாட்டமான 2 எஸ்யுவிக்கள் - தென்கொரிய கார்களின் முழு விவரங்கள்
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
Embed widget