மேலும் அறிய

Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்

Suriya 48 Pooja Album : ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ

மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கிவரும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், S-48 திரைப்படம் உருவாகிறது.


Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்

ஸ்டாராவும், சிறந்த நடிகராகவும் விளங்கும் சூர்யாவுடன் இணைந்து இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் த.செ. ஞானவேல். எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின்  கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டும் இணையும் திரைப்படத்தை, கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படங்களைத் தருவதில் புதிய சாதனைகளைப் படைத்து வரும், இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் செய்தி, இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.


Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்

வெற்றித்திரைப்படங்களின் முகவரியாக விளங்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இத்திரைப்படம் பற்றி கூறும்போது, ’’தமிழ்நாடு, தென்னிந்தியா கடந்து இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வணிக வெற்றியையும், விமர்களின் பாராட்டையும் ஒருசேர பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.

இந்தியா கடந்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் அவர்கள், அழுத்தமான கதைகளத்தில் நட்சத்திர நடிகர்களை வெற்றிகரமாக கையாண்டு வெற்றிகளைத் தரக்கூடியவர். மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை கடந்து செல்லும் சிறந்த வெற்றி திரைப்படங்களை உருவாக்குவதில் ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அளவில் பெரும் வெற்றியையும், கவனத்தையும் பெறப்போகும் திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். The one சூர்யா அவர்களையும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களையும் ஹொம்பாலே பிலிம்ஸ் குடும்பத்தில் இணைய மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.


Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்

ஹொம்பாலே பிலிம்ஸ் மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு சிறந்தப்படங்களை தயாரிப்பதிலும், அதை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றியடை செய்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்துகிறது. இந்த  தொலைநோக்கு சிந்தனையோடு உள்ள நடிகர்களையும், இயக்குனர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் இணைப்பதில் எப்போதும் தீவிரம் காட்டி வருகிறது. அதே தொலைநோக்கு சிந்தனை கொண்ட நட்சத்திர நடிகர் சூர்யா அவர்களோடும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களோடும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிறார் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.

S-48 திரைப்படத்திற்கு, இளைஞர்களின் இசை ரசனையை தற்போது ஆட்சி செய்கிற சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் மிகவும் கவனம் ஈர்த்த கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் போன்ற சிறந்த கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, கே. கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பிலும், பா. கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிப்பு செய்கிறார்கள். விரைவில் இத்திரைப்படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் 22-ம் தேதி முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget