மேலும் அறிய

`சூர்யவன்ஷி’ படத்தில் பிழையைச் சுட்டிக்காட்டிய ஐபிஎஸ் அதிகாரி.. பதிலளித்த அக்‌ஷய் குமார்!

`சூர்யவன்ஷி’ படத்தின் படப்பிடிப்பு படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றில் பிழை ஒன்றைச் சுட்டிக்காட்டிய ஐ.பி.எஸ் அதிகாரிக்குத் தனது விளக்கங்களைத் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

`சூர்யவன்ஷி’ படத்தின் படப்பிடிப்பு படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றில் இருந்த பிழை ஒன்றைச் சுட்டிக்காட்டிய ஐ.பி.எஸ் அதிகாரிக்குத் தனது விளக்கங்களைத் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். `சூர்யவன்ஷி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் அக்‌ஷய் குமார் கடந்த செப்டம்பர் 25 அன்று, இந்தப் படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியிடப்படும் என அறிவித்தார். இந்தப் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். போலிஸ் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ரன்வீர் சிங் அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் ஆகியோர் நின்றுகொண்டிருப்பது போல ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மூவரும் காக்கி உடை அணிந்திருந்தனர்.

இதனை ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே.விஜ் விமர்சித்து பகிர்ந்திருந்தார். `இன்ஸ்பெக்டர் அமர்ந்திருக்க, எஸ்.பி நின்றுகொண்டிருக்கிறார். நிஜ வாழ்க்கையில் இப்படி நடைபெறாது நண்பர்களே’ என்று இந்தி மொழியில் அவர் பதிவிட்டிருந்தார். ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள போலிஸ் திரைப்படங்கள் அனைத்தும் ஒரே கதைக்களம் என்பதால் அதில் ரன்வீர் சிங் நடிக்கும் `சிம்பா’ கதாபாத்திரம், அஜய் தேவ்கனின் `சிங்கம்’, அக்‌ஷய் குமாரின் `சூர்யவன்ஷி’ ஆகியவற்றைவிட படிநிலையில் கீழான இடத்தில் இருக்கிறது. 

`சூர்யவன்ஷி’ படத்தில் பிழையைச் சுட்டிக்காட்டிய ஐபிஎஸ் அதிகாரி.. பதிலளித்த அக்‌ஷய் குமார்!

ஐபிஎஸ் அதிகாரியின் ட்வீட்டிற்குப் பதில் தெரிவித்திருந்த அக்‌ஷய் குமார், காவல்துறையினரின் நடைமுறைகளை, கேமரா ஆன் செய்யப்பட்டவுடன் பின்பற்றுவதாகக் கூறியிருந்தார். `சார், இது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம். எங்களைப் போன்ற நடிகர்களுக்குக் கேமரா ஆன் செய்யப்பட்டவுடன், காவல்துறையின் நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்படும். நமது சிறந்த காவல்துறையினருக்கு எனது பாராட்டுகள். படம் வெளியான பிறகு, அதனைக் கண்டு மகிழ்வீர்கள் என நம்புகிறேன்’ என அக்‌ஷய் குமார் தனது பதிலைப் பதிவிட்டுள்ளார். 

ரியல் போலிஸ் அதிகாரிக்கும், ரீல் போலிஸ் அதிகாரிக்கும் இடையிலான இந்த உரையாடல் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ஆர்.ஏ.விஜ் பதிவிட்ட ட்வீட்டிற்கு இதுவரை 24 ஆயிரம் லைக்குகள் கிடைத்திருப்பதோடு, பலரால் பகிரப்பட்டும் வருகிறது. அவரது பகிர்வை நடிகர் அக்‌ஷய் குமாரின் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். 

`சூர்யவன்ஷி’ படத்தில் பிழையைச் சுட்டிக்காட்டிய ஐபிஎஸ் அதிகாரி.. பதிலளித்த அக்‌ஷய் குமார்!

கடந்த 2020ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட `சூர்யவன்ஷி’ திரைப்படம் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. ஓடிடி தளங்களில் வெளியிடாமல், திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்காக இரண்டு முறை இந்தப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வெளியாவதாக அறிவிக்கப்பட்ட `சூர்யவன்ஷி’ இந்த ஆண்டின் ஏப்ரல் 30 அன்று வெளியாகும் எனத் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது வரும் தீபாவளிப் பண்டிகையின் போது இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget