Pushpa 2 : அல்லு அர்ஜூன் ரசிகர்கள் இதை கவனிச்சீங்களா? பாட்டில் கதையை வைத்த புஷ்பா 2 இயக்குநர்
அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் கதையை, இயக்குநர் சுகுமார் முதல் பாகத்திலேயே சாமர்த்தியமாக தெரியப்படுத்தி இருக்கிறார் என்பதை ரசிகர்கள் கவனித்துள்ளார்கள்
முதல் பாகத்தில் வரும் தாக்கோ தாக்கோ மேகா என்கிற பாடலில் புஷ்பா இரண்டாம் பாகத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
புஷ்பா 2
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா மந்தனா , ஃபகத் ஃபாசில் , பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு , ஜகதீஷ் பிரதாப் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் புஷ்பா 2 . 2021 ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ் ' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக 'புஷ்பா தி ரூல்' உருவாகி இருக்கிறது. இரண்டு பாகங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பான் இந்தியத் படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் புஷ்பா 2 படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கண்டறிந்துள்ளார்கள் அல்லு அர்ஜூனின் ரசிகர்கள்.
புஷ்பா 2 கதை
I thank each and everyone of you for the birthday wishes! My heart is full of gratitude. Please take this teaser as my way of saying thank you! https://t.co/fZQDGYNlWb#Pushpa2TheRule
— Allu Arjun (@alluarjun) April 8, 2024
சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் டீசர் நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த டீசரில் அல்லு அர்ஜூன், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் கொண்டாடப்படும் கங்கம்மா ஜதாரா திருவிழாவில் பெண் தெய்வமான மாதங்கி வேடத்தில், தோன்றி வில்லன்களை அடித்து புரட்டி எடுக்கிறார்.
இந்த டீசரில் ராஷ்மிகா மந்தனா பகத் ஃபாசில் ஆகிய இருவரும் இடம்பெறவில்லை என்கிற குறை இருந்தாலும் அல்லு அர்ஜூனின் இந்த தோற்றமே ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது.
புஷ்பா 2 படத்தில் இந்த காட்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்போது உருவாகி இருக்கிறது. இந்த குறிப்பிட்ட காட்சி படத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதற்கு சான்றாக புஷ்பா முதல் பாகத்தின் பாடல் சுட்டிக்காட்டுகிறது. முதல் பாகத்தில் வரும் தாக்கோ தாக்கோ மேகா என்கிற பாட்டில் இந்த ஜதாரா திருவிழாவில் நடக்கும் நிகழ்வுகள் பாடல் வரிகளில் குறிப்பிடப்படுகின்றன.
”கடவுளுக்கே கூட ஆடும் , கோழியும் லஞ்சமாக செலுத்தப்படுகிறது. இதுவே இந்த உலகத்தின் விதி" என்கிற வரி இந்த பாட்டில் இடம்பெறுகிறது. இந்த பாட்டின் வரிகளும் சமீபத்தில் வெளியான டீசரையும் இணைத்து பார்க்கையில், திரையரங்குகளில் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் ஒரு சம்பவத்தை இயக்குநர் சுகுமார் செய்திருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.