புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதியின் மகளுக்கு நிச்சயதார்த்தம்.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்!
பிரபல நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியின் மூத்த மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிரபல நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியின் மூத்த மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி- அனிதா தம்பதி. இருவரும் இணைந்து பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளனர். இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். அனிதா குப்புசாமி யூடியூப் பக்கத்தையும் வைத்துள்ளார். அதில் அவ்வபோது சமையல் குறிப்புகள், மாடித்தோட்டம் உள்ளிட்ட பலவற்றை பதிவிடுவார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
View this post on Instagram
அவர்களின் இளைய மகளின் பெயர் மேகா. மூத்த மகளின் பெயர் பல்லவி. பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதனையடுத்து இவருக்கு ஐடி துறையைச் சேர்ந்த கௌதம் ராஜேந்திர பிரசாத் என்பவருடன் சமீபத்தில் நிச்சயம் நடைபெற்றது. சென்னையின் பிரபல நட்சத்திர விடுதியில், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆகியவர்கள் கலந்துக் கொண்டனர். கௌதம் ராஜேந்திர பிரசாத், பல்லவிக்கு மோதிரம் அணிவித்தனர். இதனையடுத்து விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து மலர்களைத் தூவினர்.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் ரீல்ஸ்களை பல்லவி மற்றும் கௌதம் ஆகியோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டனர். இதனை ஷேர் செய்த இணையவாசிகள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க..
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்