
Coffee movie in Television : க்ரைம் த்ரில்லரில் மிரட்டுவாரா இனியா?.. நேரடியாக டிவிக்கு வரும் ‘காஃபி..’ - எப்போ தெரியுமா?
காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்ற அவரின் ஆசை, நிராசையாகி போக ஒரு கார் ட்ரைவராக தனது தம்பியை பல சோதனைகளுக்கு மத்தியில், கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார் இனியா!

ஓம் சினி வென்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சதீஷ் தயாரித்துள்ள 'காஃபி' படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை இனியா. இப்படம் நேரடியாக பிரபல ஒரு தொலைக்காட்சி சேனலில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.
இது தான் கதை :
அதிரடி த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'காஃபி' படம் ஒரு வலிமையான பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட தனது சகோதரனை தேடும் அவரின் பயணம் தான் கதை. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய சிறு வயதிலேயே பெற்றோரை இழக்கிறார். காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்ற அவரின் ஆசை, நிராசையாகி போக ஒரு கார் ட்ரைவராக தனது தம்பியை பல சோதனைகளுக்கு மத்தியில், கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். சகோதரனுக்கும் பெங்களூரில் ஒரு நல்ல வேலை அமைய, அவர்களின் கஷ்டம் முடிவு வரப்போகிறது எனும் சந்தோஷத்தில் இருக்கும் போது சகோதரன் கடத்தப்படுகிறான். அவரை இனியா தேடி கண்டு பிடிக்கிறது தான் கதைக்களம்.
View this post on Instagram
நேரடியாக டிவியில் ஒளிபரப்பு :
இந்த சமூகத்தில் நடைபெறும் பல அவலங்களை தோலுரித்து காட்டும் வகையில் மிகவும் நேர்த்தியாக இக்கதை படமாக்கப்பட்டுள்ளது. துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை, இனியாவுடன் இப்படத்தில் ராகுல் தேவ், முக்தா போன்றவர்கள் வெகு சிறப்பாக நடித்துள்ளனர்.
#Iniya in #Coffee - Direct Tv Premiere
— TAMIL TV Express™ (16K) (@TamilTvExpress) November 20, 2022
Sunday at 2pm on #ColorsTamil pic.twitter.com/aea5OBIX0U
பெரிய அளவில் எதிர்பார்க்கப்ட்ட இப்படம் நேரடியாக வரும் நவம்பர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலர்ஸ் தொலைக்காட்சியில் பிற்பகல் 2 மணியளவில் ஒளிபரப்பாக உள்ளது. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு இப்படம் ஒரு த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

