”இதுக்கு பேருதான் நிஜமான சபதக் க்யூவா பாஸ்?” : 365 பெண்கள் இலக்கு - ’மயக்கம் என்ன’ நடிகரின் டார்கெட்
சுந்தர் ராமுவுக்கு 365 பெண்களை டேட்டிங் செய்ய வேண்டும் என்பதுதான் இலக்காம். இன்னும் 30 பெண்களை டேட்டிங் செய்ய வேண்டியது மீதமிருக்காம்.
தமிழ் சினிமாவில் மூன்று படங்களில் மட்டுமே நடித்தவர் நடிகர் சுந்தர் ராமு. இவரின் முதல் திரைப்படம் ‘ 3’. அதன் பிறகு நான் சிகப்பு மனிதன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்தார் . சுந்தர் ராமு நடனம் , புகைப்படம் என பன்முக திறமையுடைய கலைஞர்.இவர் ஒரு நாடக நடிகரும் கூட. இவர் சமீபத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைராலாக பேசப்பட்டு வருகிறது. சுந்தர் ராமு நூற்றுக்கணக்கான பெண்களை டேட்டிங் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் , நியூ இயர் ரெஷல்யூஷனாக இந்த டேட்டிங் திட்டத்தை சுந்தர் ராமு தொடங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது வரையில் 335 பெண்களை சுந்தர் ராமு டேட்டிங் செய்துள்ளாராம். இதில் சில நடிகைகளும் அடங்குவர். ஆனால் சுந்தர் ராமுவுக்கு 365 பெண்களை டேட்டிங் செய்ய வேண்டும் என்பதுதான் இலக்காம். இன்னும் 30 பெண்களை டேட்டிங் செய்ய வேண்டியது மீதமிருக்காம்.
சுந்தர் ராமு டேட்டிங் செய்யும் பெண்களுக்கு வயது வரம்பு எதுவும் கிடையாதாம். அதே போல அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பது பற்றியும் இவருக்கு கவலை இல்லையாம். 105 வயது பாட்டி, 90 வயது கன்னியாஸ்திரி , துப்புரவு பணி செய்பவர், நடிகை, மாடல் , அரசியல்வாதி , சமூக ஆர்வலர்கள், யோகா ஆசிரியர்கள் என நீள்கிறது இவரின் டேட்டிங் பட்டியல் . இதெல்லாம் எதுக்கு பாஸ் பண்ணுறீங்க என கேட்டதற்கு, “இந்தியாவில் பெண்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை தான் கையில் எடுத்திருப்பதாக கூறுகிறார் சுந்தர் ராமு.
சுந்தர் தான் ஒரு பாலின சமத்துவம் உள்ள குடும்பம் மற்றும் பள்ளி சூழலில் வளர்ந்தாலும் சமுதாயத்தில் பெண்களுக்கான சமத்துவம் கிடைப்பதில்லை என்பதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தாராம் . மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமைகள் போன்ற சம்பவங்களை பற்றி அறியும் பொழுது தனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும் என கூறும் அவர் தான் டேட்டிங் செய்யும் பெண்களுடன் செய்யும் உரையாடல்களையும் எழுதி வைக்கும் வழக்கத்தையும் வைத்திருக்கும் வித்தியாசமான மனிதராக உள்ளார். இயல்பாகவே நான் ஒரு ரொமாண்டிக் பையன்தான் என கூறும் சுந்தர், இந்த டேட்டிங் ரொமான்ஸ்களுக்கு அப்பாற்பட்டது , தனிச்சிறப்பு வாய்ந்தது என்கிறார்.
மேலும் பாலின சமத்துவம் என்பது அரசாலும் , அமைப்புகளாலும் மாற்றக்கூடியது அல்ல. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியால் மட்டுமே சாத்தியம் அதற்கான ஆரம்ப புள்ளியாகத்தான் சுந்தர் இருக்கிறாராம். சுந்தர் ராமு விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தற்போது நெட்டிசன்கள் ‘கிங் ஆஃப் டேட்டிங்’ என அழைக்கின்றனர்.