மேலும் அறிய

Ajith Kumar: அஜர்பைஜான் இந்திய தூதர் ஸ்ரீதரன் மதுசூதனன் குடும்பத்துடன் அஜித்! வைரலாகும் புகைப்படம்

அஜித்தை வெறும் ஒரு நடிகர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது என்பதை அவருடன் பேசிய உரையாடல்களில் இருந்து தெரிந்துகொண்டதாக அஜர்பைஜானில் உள்ள இந்திய தூதர் ஸ்ரீதரன் மதுசூதனன் பதிவிட்டுள்ளார்

அஜித் குமார்

நடிகர் அஜித் குமார் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 22 ஆம் தேதி முடிவடைந்தது. மகிழ் திருமேணி இயக்கும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். த்ரிஷா , அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் குமார் அஜர்பைஜானில் உள்ள இந்திய தூதர் ஸ்ரீதரவ் மதுசூதனனை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார். அஜித்துடன் உரையாடிய அனுபவம் குறித்து ஸ்ரீதரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அஜித்தை வெறும் நடிகர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது

இந்த பதிவில் அவர் “ அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித், சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு இரவு உணவிற்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்களான ஆரவ் மற்றும்  நிகில்  ஆகியோர் வந்தனர். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் எங்களுடன் இணைந்தனர். ஒரு இனிமையான மாலை. விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் நான் அஜித் படங்களைப் பார்த்திருக்கிறேன். அஜித்தை வெறும் ஒரு நடிகர் என்று மட்டும் விவரித்து விட முடியாது என்பதை எங்களுக்கு இடையிலான உரையாடலின் வழி உணர்ந்துகொண்டேன். குடும்பக் கதைகள், உணவு, சிரிப்பு என நாங்கள் அனைவரும் நள்ளிரவைத் தாண்டி அரட்டை அடித்தோம்.  எங்களின் குடும்ப கதைகளைக் கேட்டு அஜீத் உட்பட அனைவரும்  அடக்க முடியாமல் சிரித்தபோது, ​​நானும் வைதேகியும் நாங்கள் பேசுவதைக் கேட்க  டிக்கெட் வைத்து விலை பேசலாம் என்கிற எங்கள் யோசனை மீண்டும் பலப்பட்டது. 

ஆர்வத்துடன் புதிதாக ஒன்றை முயற்சிப்பதில் உள்ள மகிழ்ச்சி, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நமது மனநிலை எப்படி மாறுகிறது, பைக், கார், சைக்கிள் சவாரி போன்றவற்றைப் பற்றியும் சில செயல்களை செய்யும் போது நம் உடலும் மனமும் ஒற்றுமையாகச் செயல்படும் தருணங்களின் அனுபவங்கள் போன்ற விஷயங்களைப் பற்றி பேசினோம் . அஜித் சென்றப் பின்பும் என் மனதில் சில கேள்விகள் எழுந்தன. சிலர் மட்டும் ஏன் பல்வேறு விஷயங்களை செய்துபார்க்கிறார்கள். அவர்களை எது ஊக்குவிக்கிறது. அவர்களுக்கு அதில் என்ன கிடைக்கிறது? 

இந்த கேள்விகளுக்கு எனக்கு நானே சொல்லிக் கொண்ட பதில் இதுதான் எல்லா விஷயத்திலும் ஏதோ ஒரு பலன் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு செயலை செய்வதில் கிடைக்கும் அனுபவமே போதுமானது.’ என்று அவர் பதிவிட்டுள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget