Indian 2 : விரைவில் முடிவடைய உள்ளது இந்தியன் 2 படப்பிடிப்பு... ஷங்கர் செய்யும் ஸ்மார்ட்வொர்க் இதுதான்..
இந்தியன் 2 படப்பிடிப்பு முழுவீச்சில் மிக மிக மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை 2023ம் மத்தியில் முடிக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் சரியான வசூல் வேட்டையாக பிளாக் பஸ்டர் திரைப்படமாக 1996ல் வெற்றிபெற்ற திரைப்படமான "இந்தியன்" திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது.
2019ம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டு சில பல பிரச்சனைகளால் பாதியிலேயே முடங்கிப்போனது. அதனை தொடர்ந்து பட்ஜெட் பிரச்சனை மற்றும் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தொடரமுடியாமல் நின்றுபோனது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது.
மும்மரமாக நடைபெறும் இந்தியன் 2 :
தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு முழுவீச்சில் மிக மிக மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை 2023ம் மத்தியில் முடிக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். படப்பிடிப்பு முடிவடைந்த உடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெறும் என கூறப்படுகிறது. வழக்கம் போல் இயக்குநர் ஷங்கரின் படங்கள் என்றாலே ஏராளமான விஷூவல் எஃபெக்ட்ஸ் இருக்கும். இருப்பினும் எந்திரன், 2 . o போன்ற படங்களில் இருந்த VFX போல மிக அதிகமான அளவில் இப்படத்தில் இருக்காது என்றும் சில அதிரடி காட்சிகள் மற்றும் பாடல்களில் மட்டுமே இந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சேர்க்கப்ட்டுள்ளன என கூப்படுகிறது. மிகவும் மும்மரமாக பணிகள் நடைபெறுவதால் அனேகமாக இப்படம் தீபாவளி 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். இப்படத்திற்கான விளம்பர பணிகள் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Some of the major Pan India releases of 2023
— Himesh (@HimeshMankad) October 9, 2022
- #Adipurush (Pongal)
- #PS2 (Summer)
- #Salaar (Gandhi Jayanti)
- #Indian2 (Dussehra / Diwali)
- #Pushpa2
Other expected - #NTR30 with #KortalaSiva, #RC15 (Mostly 2024), #Thalapathy67 with #LokeshKanagaraj & #SanjayDutt.
இந்தியன் 2 படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளிலும் பான் இந்திய படமாக வெளியாகும். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ஷங்கர் - லைகா நிறுவனம் - கமல்ஹாசன் கூட்டணியில் ஒரு மேஜிக்கை திரையில் கொண்டுவரும் என மிகவும் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளனர் ரசிகர்கள்.
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் ஆர்.சி 15 :
தில் ராஜு தயாரிப்பில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிக்கும் ஆர்.சி. 15 திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார் ஷங்கர். இப்படத்தில் ராம் சரண் ஒரு ஐஏஎஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் இந்திய முழுவதிலும் 2024-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இதுவரையில் 3 மாத இடைவெளியில் இதுவரையில் இரண்டு படங்கள் எடுக்கப்பட்டது இல்லை. மிகவும் கூறிய காலத்தில் ஒரு பெரிய அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தயாராகிறது.