மேலும் அறிய

Indian 2 Pre-Booking: அட்வான்ஸ் புக்கிங்கிலேயே ஜெட் வேகத்தில் இந்தியன் 2 .. வெளிநாடுகளில் கோடிகளை அள்ளும் வசூல்!

Indian 2 Pre - Booking: அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கடந்த ஜுன் 21ஆம் தேதியே இந்தியன் 2 ப்ரீ புக்கிங் தொடங்கி விட்ட நிலையில், நாளை கேரளாவில் தொடங்குகிறது.

Indian 2 Pre- Booking Collection: ஷங்கர் - கமல்ஹாசன் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மெகா கூட்டணி அமைத்துள்ள இந்தியன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

லைகாவின் பிரமாண்டத் தயாரிப்பு

ஷங்கரின் பிரமாண்டத்துக்கு பிரமாண்டம் சேர்க்கும் வகையில் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் மறைந்த சில நடிகர்களும் இப்படத்தில் திரையில் தோன்றவிருப்பது ஏற்கெனவே ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மேலும், இந்தியன் 1 படத்துடன் அனிருத் இசை ஒப்பீடு, மற்றும் விமர்சனங்களைக் கடந்த தற்போது இணைய ட்ரெண்டில் பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. 

இந்நிலையில் பட ரிலீசுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள சூழலில், இந்தியன் 2 படத்தின் ப்ரீபுக்கிங் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கேரளாவில் நாளை அட்வான்ஸ் புக்கிங் தொடங்கும் நிலையில், பிற மாநிலங்களில் எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

வெளிநாடுகளில் பட்டையைக் கிளப்பும் வசூல்

மற்றொருபுறம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கடந்த ஜுன் 21ஆம் தேதியே டிக்கெட்டுகள் ப்ரீ புக்கிங் தொடங்கி விட்ட நிலையில், தற்போது ரூ.5 கோடிகளை ப்ரீ புக்கிங் வசூல் தொகை தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 திரைப்படம் ரூ.250 கோடிகள் பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் தமிழ் சினிமாவில் முதல் 1000 கோடிகளை எட்டப்போகும் திரைப்படமாக இந்தியன் 2 திரைப்படம் இருக்கும் என படக்குழுவினர் ஏற்கெனவே அடித்துக் கூறிவருகின்றனர். படத்தின் ப்ரொமோஷன் பணிகளும் களைகட்டி வருகின்றன, முன்னதாக ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்ட படக்குழு ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். தெலுங்கில் இந்தியன் 2 திரைப்படம் பாரதீயடூ 2 என்ற பெயரிலும், இந்தியில், இந்துஸ்தானி 2 என்ற பெயரிலும் வெளியாக உள்ளன.

கோலிவுட்டின் முதல் 1000 கோடி படமாக அமையுமா?

பான் இந்தியா என்ற வார்த்தை உபயோகிக்கப்படுவதற்கு முன்னதாகவே இந்தியன் முதல் பாகம் பான் இந்திய ஹிட் அடித்து கமல்ஹாசனுக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்த நிலையில், அவரது ஐக்கானிக் சேனாபதி கதாபாத்திரத்தின் மீள்வருகை மற்றும் இந்தியன் 2 திரைப்படத்தினை எதிர்பார்த்து பான் இந்திய ரசிகர்கள் காத்துள்ளனர். 

இறுதியாக ரூ.600 கோடி செலவில் பிரபாஸ் - கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கல்கி திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலக அளவில் 191.5 கோடிகளை வசூலித்தது. இந்நிலையில், பான் இந்திய படம் மற்றும் உலக நாடுகளில் மேற்கொள்ளப்படும் உச்சகட்ட ப்ரொமோஷன் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படம் இந்த சாதனை முறியடிக்கும் வகையில் வசூல் காட்டும் என கோலிவுட் வட்டாரம் எதிர்பார்க்கிறது

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
“உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கிருஷ்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார் சந்திரசூட்..!
“உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கிருஷ்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார் சந்திரசூட்..!
Breaking News LIVE 17th oct 2024: ரூபாய் 57 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை
Breaking News LIVE 17th oct 2024: ரூபாய் 57 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை
Watch Video: நக்கலாக சிரித்த ஜோ ரூட்! தக்க பாடம் புகட்டிய பாகிஸ்தான் பவுலர் - நடந்தது என்ன?
Watch Video: நக்கலாக சிரித்த ஜோ ரூட்! தக்க பாடம் புகட்டிய பாகிஸ்தான் பவுலர் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
முடிவுக்கு வந்த போராட்டம்! பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்...‌ அடுத்து என்ன நடக்கும்?
“உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கிருஷ்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார் சந்திரசூட்..!
“உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கிருஷ்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார் சந்திரசூட்..!
Breaking News LIVE 17th oct 2024: ரூபாய் 57 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை
Breaking News LIVE 17th oct 2024: ரூபாய் 57 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை
Watch Video: நக்கலாக சிரித்த ஜோ ரூட்! தக்க பாடம் புகட்டிய பாகிஸ்தான் பவுலர் - நடந்தது என்ன?
Watch Video: நக்கலாக சிரித்த ஜோ ரூட்! தக்க பாடம் புகட்டிய பாகிஸ்தான் பவுலர் - நடந்தது என்ன?
52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள்: சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம்! சுங்கத்துறை அதிரடி!
52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள்: சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம்! சுங்கத்துறை அதிரடி!
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
“இன்று கரையை கடக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை” சூறாவளிக் காற்று வீசும்..!
“இன்று கரையை கடக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை” சூறாவளிக் காற்று வீசும்..!
சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
Embed widget