Ilayaraja on Vetrimaaran: நேரு அரங்கில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி.. பாடல்களை பாடும் இளையராஜா.. வெற்றிமாறனின் விடுதலை அப்டேட்!
வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
![Ilayaraja on Vetrimaaran: நேரு அரங்கில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி.. பாடல்களை பாடும் இளையராஜா.. வெற்றிமாறனின் விடுதலை அப்டேட்! ilayaraja to perform live at the audio launch of his movie with vetrimaaran viduthalai Ilayaraja on Vetrimaaran: நேரு அரங்கில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி.. பாடல்களை பாடும் இளையராஜா.. வெற்றிமாறனின் விடுதலை அப்டேட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/3280413d642ad417540bb2834f8127591667628905038570_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை’. பிரபல இசையமைப்பாளரான இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனது 15 வருட சினிமா வாழ்கையில் வெற்றிமாறன் முதன்முறையாக இளையராஜாவுடன் இந்தப்படத்தில் இணைந்திருப்பதால், இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளது.
View this post on Instagram
அதன் படி வெளியான தகவலில், “ விடுதலை படக்குழு அடுத்த வருடம் ஜனவரி 17 ஆம் தேதி விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு அரங்கில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா விடுதலை படத்தின் பாடல்களை மட்டுமல்லாது, அவரது இசையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல்களையும் பங்கு கொள்ள செய்ய இருக்கிறாராம்.
இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, சூரி, ராஜீவ் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்ள இருக்கிறனர். கூடுதலாக, நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பெரிய நடிகர்களை இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கொண்டு வரவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
View this post on Instagram
சமீபகாலமாக இளையராஜா நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னதாக, கெளதம் மேனன் இயக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்திற்காக இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)