மேலும் அறிய

Ilayaraja Meets Rajini: இளையராஜாவுடன் திடீர் சந்திப்பு.. பாலிவுட் இயக்குநருடன் கைகோக்கும் ரஜினி.. பரபரக்கும் தலைவர் 170..!

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இன்று இசைஞானி இளையாராஜா சென்றார். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இன்று இசைஞானி இளையாராஜா சென்றார். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வரிசை கட்டி நிற்கும் படங்கள்:

இளையராஜா இசையில் வெற்றிமாறனின் விடுதலை, விஷாலின் துப்பறிவாளன் 2, விஜய் ஆண்டனியின் தமிழரசன், சிபி சத்யராஜின் மாயோன், விஜய் சேதுபதியின் மாமனிதன், நினைவெல்லாம் நீயடா, சுசிகணேசனின் வஞ்சம் தீர்த்தாயடா உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

கலங்கப்போகும் கோவை..

இதற்கிடையே, ஜுன் 2ல் இளையராஜாவின் 80 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை கொடீசியா அரங்கில் மாலை 6.30 மணியளவில் ‛ராஜா’ என்ற பெயரில் இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான மனோ, கார்த்திக், உஷா உதூப், எஸ்பிபி சரண், யுகேந்திரன் வாசுதேவன், ஸ்வேதா மோகன், விபாவரி ஆப்தே ஜோஷி, அனிதா, பிரியா ஹேமேஷ், சுர்முகி உள்ளிட்டோர் பாட உள்ளனர். அவர்களோடு இளையராஜாவும் ஓரிரு பாடல்களை பாட உள்ளார். இதற்கான ரிகர்சல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

சந்திப்புக்கு காரணம் என்ன? 

இந்நிலையில் இன்று (மே 24) சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு இசைஞானி இளையராஜா சென்றார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்ததாகத் தெரிகிறது. விடைபெறும்போது ரஜினிகாந்த் எங்கே செல்கிறீர்கள், என்ன வேலையாக செல்கிறீர்கள் என்று ரஜினிகாந்த் விசாரித்தார்.

அப்போது ரஜினிகாந்திடம் இளையராஜா கோவை இசை நிகழ்ச்சி ரிகர்சலுக்கு செல்வதாகக் கூறியுள்ளார். உடனே ரஜினிகாந்த் நானும் வருகிறேன் என்று இளையராஜாவுடன் சென்றுள்ளார். தொடர்ந்து ஸ்டூடியோவில் நடந்த ரிகர்சலைக் ரஜினி கேட்டு ரசித்துள்ளார். பின்னர் ரஜினிகாந்த் வீடு திரும்பிவிட்டார். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்ச்சையில் சிக்கிய ராஜா:

அண்மையில் இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையில் சிக்கினார். அவர் எழுதிய புத்தக மதிப்புரையே சர்ச்சைக்கு காரணமானது. இந்நிலையில் அவரது இசை நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி 170யில் இணையும் இளையராஜா:

இயக்குனர் பால்கியும் ரஜினிகாந்தும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் ரஜினிகாந்தின் 170 திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் 170 ஆவது படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார் என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது. இன்றைய சந்திப்பும் கூட அதன் நிமித்தமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடைசியாக 1994-ம் ஆண்டு வெளியான ‘வீரா’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து இளையராஜா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அந்தப் படம் முடிந்ததும் பால்கி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: விழுப்புரம், கடலூரில் வடியாத வெள்ளம்! 10 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Embed widget