மேலும் அறிய

Ilayaraaja: ”இளையராஜா அமைதியானவர்..அடக்கமானவர்” - உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்!

Ilayaraja Copyright Case : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர், ‘இசைஞானி’ என அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் இளையராஜா. 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Ilayaraja Copyright Case : காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா தொடர்ந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர், ‘இசைஞானி’ என அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் இளையராஜா. 1500 படங்களுக்கு இசையமைத்துள்ள இவரின் 4,500 பாடல்களை பயன்படுத்த எக்கோ நிறுவனமும், அகி என்ற இசை நிறுவனமும் முன்னதாக ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்தியதற்கு ஆட்சேபனை தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

2019 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, “பாடல்கள் மீது அவருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை இருந்தாலும் தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை இருக்கிறது” என உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து இளையராஜா மேல்முறையீட்டு செய்தார். இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்ததோடு மட்டுமல்லாமல் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. பாடல்களை இசை நிறுவனம் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் பாடல்களுக்கான காப்புரிமை தயாரிப்பாளரிடம் உள்ளதால், ஒப்பந்தம் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாக எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த விசாரணையில் இசை நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “இளையராஜா எல்லாருக்கும் மேலானவர் என தன்னை நினைக்கிறார்” என கருத்து தெரிவித்தார். 

ஆனால் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இதற்கு பதிலளித்த நீதிபதி மகாதேவன், ‘முத்துசாமி தீட்சிதர், தியாகராஜர், சியாமா சாஸ்திரி ஆகிய இசை மும்மூர்த்திகள் தான் எல்லோருக்கும் மேலானவர்கள். ஆனால் இளையராஜா விஷயத்தை இந்த கருத்தை கூற முடியாது’ என தெரிவித்திருந்தார். அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பாடல்கள் பயன்படுத்திய விவகாரத்தில் காப்புரிமையில் தனது உரிமை தான் மேலானது என்ற கருத்தையே இளையராஜா கூறினார். அவர் அமைதியானவர், அடக்கமானவர், சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதித்து நடக்கக்கூடியவர் என தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Embed widget