மேலும் அறிய

pa.ranjith santhosh narayanan clash | இளையராஜா உடன் இணையும் பா.ரஞ்சித்: விடைபெற்றார் சந்தோஷ் நாராயணன்!

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது தனது படத்தின் இசையமைப்பாளரை ரஞ்சித் மாற்றிவிட்டாராம்.

இயக்குநர் மற்றும் இசையமைப்பாளரின் சிறந்த காம்போ படத்தை எப்போதுமே வேற லெவலுக்கு எடுத்துச்செல்லும். பாரதிராஜா- இளையராஜா, மணிரத்தினம் - ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் வரிசையில் பா.ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணியை பற்றி சொல்லவே வேண்டாம். பா.ரஞ்சித்  இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி திரைப்படம் முதல் , அடுத்தடுத்த படங்களான மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அனைத்து படத்திலும்  சந்தோஷ் நாராயணனே இசையமைத்தார். இந்நிலையில் பா.ரஞ்சித் அடுத்ததாக கையில் எடுத்திருக்கும் காதல் சப்ஜெக்ட் படமான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது தனது படத்தின் இசையமைப்பாளரை ரஞ்சித் மாற்றிவிட்டாராம். இசைஞானி இளையராஜாவை நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு இசையமைக்க வேண்டும் என பா.ரஞ்சித் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இளையராஜாவும் பச்சைக்கொடி அசைத்துவிட்டதாக கூறப்படுகிறது.  பா.ரஞ்சித் இசைஞானி கூட்டணி என்பதாலேயே படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pa.ranjith santhosh narayanan clash | இளையராஜா உடன் இணையும் பா.ரஞ்சித்: விடைபெற்றார் சந்தோஷ் நாராயணன்!

முன்னதாக மாஜாவின் தனியிசை பாடல்களான என்ஜாய் எஞ்சாமி மற்றும் நீயே ஒளி பாடல்கள் வைரலானதை அடுத்து ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டிருந்தது. அதன் அட்டைப்படத்தில் பாடகி தீயும்,  பாடகர் SVDP யும் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இந்த  இரு பாடல்களிலும் முக்கிய பங்காற்றிய அறிவு இடம்பெறாதது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டரில் மாஜாவிடமும் ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையிடமும் கேள்வி எழுப்பினார். இது பாடல் பேசும் அரசியலை அழிக்கும் செயலென்றும் குறிப்பிட்டிருந்தார். பாடகி தீ , சந்தோஷ் நாராயணனின் மகள் என்பதால் , இந்த விவகாரத்தில் அவர் ஒருதலை பட்சமாக நடந்துக்கொண்டதாக   ரஞ்சித் கூறியதாக தெரிகிறது. இதனால் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை சூடு பிடிக்கவே , சந்தோஷ் நாராயணும் , பா.ரஞ்சித்தும்  இணைந்து பணியாற்ற போவதில்லை என இரு தரப்பும் முடிவெடுத்துவிட்டார்களாம். 

pa.ranjith santhosh narayanan clash | இளையராஜா உடன் இணையும் பா.ரஞ்சித்: விடைபெற்றார் சந்தோஷ் நாராயணன்!

இதற்கு பிறகு ’நட்சத்திரம் நகர்கிறது ‘படத்தில் யாரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இளைய ராஜாவின் கால்ஷூட்டை பெற்று  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பா.ரஞ்சித். இருந்தாலும் சந்தோஷ் நாராயணன், பா.ரஞ்சித்  கூட்டணியின் விரிசல் ரசிகர்களுக்கு இழப்புதான். நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அசோக் செல்வன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் காளிதாஸ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம் ரஞ்சித். மாரி செல்வராஜ் இயக்கத்தில் , துருவ் விக்ரம் நடிக்கும்  கபடி வீரரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் புதிய படத்தை பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget